Connect with us
M.R.Radha

Cinema News

எம்.ஆர்.ராதாவுக்கு நடிகவேள்ன்னு பெயர் வந்தது எப்படி தெரியுமா?? ஒரு சுவாரஸ்ய தகவல்…

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகராக திகழ்ந்த எம்.ஆர்.ராதா, தனது திரைப்படங்களின் மூலம் பல பகுத்தறிவு கருத்துக்களை மக்களிடையே கொண்டு சென்றார். எம்.ஆர்.ராதா என்றவுடனே நமது நினைவுக்கு வருவது “ரத்த கண்ணீர்” திரைப்படம்தான். இத்திரைப்படத்தில் எம்.ஆர்.ராதா வெளிப்படுத்திய அசாத்தியமான நடிப்பை குறித்து இப்போதும் பேசப்பட்டு வருகிறது.

M.R.Radha

M.R.Radha

எம்.ஆர்.ராதா தனது 10 ஆவது வயதிலேயே மேடை நாடகங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். தனது வாழ்நாளில் கிட்டத்தட்ட 5000க்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்திருக்கிறார் எம்.ஆர்.ராதா.

இவ்வாறு நாடகத்துறையில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்த எம்.ஆர்.ராதா, 1937 ஆம் ஆண்டு “ராஜசேகரன் ஏமாந்த சோனகிரி” என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாத்துறையில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து “சந்தனத்தேவன்”, “சத்தியவானி”, “ரத்த கண்ணீர்” போன்ற பல திரைப்படங்களில் நடித்த எம்.ஆர்.ராதா தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத நடிகராக மாறிப்போனார்.

இதையும் படிங்க: 10 பேர்தான் வந்தாங்க… ஷோ கேன்சல்… “துணிவு” படத்துக்கு வந்த சோதனையை பாருங்க…

M.R.Radha

M.R.Radha

எம்.ஆர்.ராதாவிற்கு நடிகவேள் என்ற பட்டமும் உண்டு என்பதை சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள். இந்த நிலையில் நடிகவேள் என்ற பட்டம், எம்.ஆர்.ராதாவுக்கு எப்படி வந்தது என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

1952 ஆம் ஆண்டு திருச்சியின் தேவர் மன்றத்திலே எம்.ஆர்.ராதாவின் “போர்வாள்” என்ற நாடகம் அரங்கேறியது. அந்த நாடகம் தந்தை பெரியாரின் தலைமையில் நடந்தது. அந்த நாடகத்தில் எம்.ஆர்.ராதாவின் அசுரத்தனமான நடிப்பை பார்த்த கவிஞர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி என்பவர், தந்தை பெரியாரின் முன்னிலையில் எம்.ஆர்.ராதாவுக்கு நடிகவேள் என்ற பட்டத்தை சூட்டினார். இவ்வாறுதான் எம்.ஆர்.ராதாவுக்கு நடிகவேள் என்ற பெயர் வந்தது.

author avatar
Arun Prasad
Continue Reading

More in Cinema News

To Top