×

அரசு மருத்துவமனையில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி... 6 மாத கர்ப்பம்.. எஸ்கேப் ஆன வாலிபர்...

அரசு மருத்துவமனையில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ல்
 

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் வசிக்கும் ஒரு இளம்பெண் தனது வயிற்றில் கல் அடைப்பு பிரச்சனையால் அவதிப்பட்டர. எனவே, 6 மாதங்களுக்கு முன்பு நெல்லை பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். அவருடன் அவரின் 17 வயது மகளும் சென்றுள்ளார்.

அப்போது, சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். அப்போது அங்கு சிகிச்சை பெற்று வந்த மற்றொரு நோயாளியின் குடும்பத்தினர் அவர்களுடன் நெருங்கிப்பழகினர். அதைப்பயன்படுத்தி அந்த குடும்பத்தில் இருந்த வாலிபர் ஒருவர் அப்பெண்ணை மிரட்டி பாலியல் பலாதகாரம் செய்துள்ளார். மேலும், வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளார். அதன்பின் அப்பெண்ணின் தாய் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இந்நிலையில், அந்த சம்பவம் நடந்து 6 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், சிறுமியின் உடலில் ஏற்பட்ட மாற்றங்களால் சந்தேகமடைந்த தயார் மற்றும் உறவினர்கள் அப்பெண்ணிடம் விசாரித்த போது மருத்துவமனையில் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். தற்போது அவர் 6 மாதம் கர்ப்பிணியாக இருந்ததும் தெரியவந்தது.

இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் நெல்லை மாநகர அனைத்து மகளில் காவல் நிலையத்தில் அளித்தனர். எனவே, 6 மாதங்களுக்கு முன்பு அரசு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த நோயாளியின் விபரங்களை சேகரித்து சம்பந்தப்பட்ட வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News