கருப்பு படத்தில் நடந்த சம்பவம் - வெளியில் சொல்லவே பயப்படும் சின்மயி!
பாடகி சின்மயி:
தென்னிந்திய சினிமாவின் பிரபலமான பின்னணி பாடகி ஆன சின்மயி பிரபலகத்துக்கு ஏற்றவாறு சர்ச்சைக்குரிய நபராக பார்க்கப்பட்டு வருகிறார். இவர் பாடல் ஆசிரியர் வைரமுத்து மீது பாலியல் தொல்லை புகார் கொடுத்ததன் மூலமாக மிகப்பெரிய அளவில் சர்ச்சைக்குரிய நபராக பேசப்பட்டு வந்தார்.

இதனால் இவர் ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு திரைப்படங்களில் பாடல் பாடுவதில் இருந்தே நிறுத்தி வைக்கப்பட்டனர். அதன் பிறகு ஏ. ஆர் ரகுமானின் பாடல் கச்சேரி ஒன்றில் வாய்ப்பு கொடுத்ததால் மீண்டும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து தற்போது திரைப்படங்களில் பின்னணி பாடகியாக தொடர்ச்சியாக பாடல் பாடி வருகிறார்.

வெளியில் சொல்ல பயப்படும் சின்மயி!
அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த சூர்யாவின் கருப்பு திரைப்படத்தில் பாடகி சின்மயி பின்னணி பாடகியாக பாடல் பாடியிருக்கிறார். டப்பிங் ஆர்டிஸ்ட் ஆக குரல் கொடுத்திருக்கிறார். இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கும் சின்மயி நான் கருப்பு படத்தில் டப்பிங் கொடுத்திருக்கிறேன் என்பதை வெளியில் சொல்லவே ரொம்பவே பயந்தேன் .
காரணம் நானும் சர்ச்சைக்குரிய நபர் என்னால் இந்த பட குழுவிற்கும் படத்திற்கும் பிரச்சனை வந்துவிடக்கூடாது. ஆர் ஜே பாலாஜி என்னால் கஷ்டப்படக்கூடாது என்று எண்ணி தான் நான் வெளியில் சொல்லவே பயந்தேன் என்று சின்மயி தெரிவித்து இருக்கிறார். இவ்வளவு சிறந்த பாடகி மற்றும் இவ்வளவு அருமையான குரல் வளம் கொண்ட இவருக்கு இவ்வளவு பிரச்சனைகள் உண்டா? என்று திரைப்படத் துறை மீது இருக்கும் நம்பிக்கை இழந்து ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
