×

கொரோனா பற்றி அலட்சியப் பதிவு – ஹிப் ஹாப் ஆதியை வச்சு செய்யும் நெட்டிசன்கள் !

கொரோனா வைரஸ் பற்றி தவறான ஒரு பதிவைப் பகிர்ந்த நடிகர் ஹிப்ஹாப் ஆதிக்கு சமூக வலைதளங்களில் கண்டனம் எழுந்துள்ளது.

 

கொரோனா வைரஸ் பற்றி தவறான ஒரு பதிவைப் பகிர்ந்த நடிகர் ஹிப்ஹாப் ஆதிக்கு சமூக வலைதளங்களில் கண்டனம் எழுந்துள்ளது.

நடிகர் ஹிப் ஹாப் ஆதி சமீபத்தில் தனது சமூகவலைதளத்தில் ஒரு பதிவை பகிர்ந்தார். அதில் படப்பிடிப்பில் முகமூடியுடன் இருக்கும் அவர் புகைப்படத்துடன் ‘காற்று அதிகமாக வீசும் இடத்திற்கு படப்பிடிப்பிற்காக செல்லும்போது தூசு படக்கூடாது என்று முகமூடி அணிந்து இருந்தால் கூட அனைவரும் உங்களுக்கு கொரோனா வைரஸ் என்று நினைப்பார்கள். கொரோனா விற்கு நோ… ஏன் என்றால் நம்மிடம் நிலவேம்பு இருக்கு ப்ரோ’ எனத் தெரிவித்திருந்தார்.

நிலவேம்பு கசாயம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்கும் என்றாலும் அதனால் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து காப்பாற்ற முடியும் என்ற எந்த மருத்துவ தரவுகளும் இல்லை. இதனால் அவரது பதிவு ரசிகர்களைக் கடுப்பாக்கியுள்ளது. இதையடுத்து அவரது பதிவில் ‘உங்களுக்கு ஒன்றும் தெரியாது என்றால் வாயை மூடிக்கொண்டு அமைதியாக இருங்கள்’ எனக் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News