×

கே.ஜி.எஃப் நடிகர் செய்த மாபெரும் உதவி - நன்றி கூறும் திரையுலகம்

 
Yash

இந்தியா முழுவதும் தற்போது கொரோனா 2வது அலை வீசி வருகிறது. தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் கடுமையான பாதிப்பு நிலவுகிறது. தற்போது அந்த பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. ஒருபக்கம் கொரோனா ஊரடங்கால் சினிமாத்துறை தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏனெனில், கடந்த சில மாதங்களாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே, அவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே, சில நடிகர்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கே.ஜி. எஃப் பட நடிகர் யாஷ் கன்னட சினிமா தொழிலாளர்களுக்கு ரூ.1.5 கோடி நிதியுதவி வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த செய்தி கன்னட சினிமா தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களிலும் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
 

From around the web

Trending Videos

Tamilnadu News