×

நடிகையின் வாய்ஸைக் கட் பண்ணிய லிப்ட் படக்குழுவினர் – கோபத்தில் பிகில் அம்ரிதா!

பிகில் படத்தின் மூலம் பிரபலமான  நடிகை அமிர்தா ஐயர் இப்போது லிப்ட் என்ற படத்தில் பிக்பாஸ் கவினுடன் நடித்துள்ளார்.

 

பிகில் படத்தின் மூலம் பிரபலமான  நடிகை அமிர்தா ஐயர் இப்போது லிப்ட் என்ற படத்தில் பிக்பாஸ் கவினுடன் நடித்துள்ளார்.

பிகில் படத்தின் கால்பந்து அணியில் ஒரு வீராங்கனையாக நடித்திருந்தவர் அம்ரிதா ஐயர். அந்த படத்தின் மூலம் கிடைத்த பிரபலத்தால் இப்போது தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் வரப்பிரசாத் என்பவர் இயக்கிய லிப்ட் என்ற படத்தில் அவர் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் கதாநாயகனாக பிக்பாஸ் புகழ் கவின் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்னும் ஓரிரு மாதங்களில் இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,

ஆனால் அம்ரிதா அந்த படக்குழுவினர் மீது கோபத்தில் உள்ளதாக சொல்லப்படுகிறது. அதற்குக் காரணம் அவரது கதாபாத்திரத்துக்கு வேறொருவரை வைத்து டப்பிங் பேசவைத்துள்ளரனாம் படக்குழுவினர். இதனால் கடுப்பான அமிர்தா  ஒரு தமிழ்ப் பெண்ணான என்னால் தமிழ்ப் படத்துக்கு டப்பிங் பேச முடியாதா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News