×

தாயை சந்திக்க வந்த சிறுமி...தொடவிடாத கொரோனோ...கலங்க வைக்கும் வீடியோ....

கொரோனோ நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் தனது தாயை சந்திக்க வந்த மகள் தூரத்தில் இருந்தே சைகையால் பேசி சென்ற வீடியோ பலரையும் கலங்கடித்துள்ளது.
 

சீனாவில் உருவான கொரோனோ வரைஸ் பலரின் உயிரையும் பறித்து விட்டது. சில ஆயிரம் பேர் அந்த நோய்க்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றன. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் நர்ஸ் மற்றும் மருத்துவர்களுக்கும் இந்த நோய் தாக்கும் என்பதால் அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு, வெளியே செல்ல முடியாமல் மருத்துவமனையிலேலே முடங்கிக் கிடக்கின்றனர். இதனால், அவர்கள் தங்கள் குடும்பத்தினரை கூட காண முடிவதில்லை.

அப்படி மருத்துவமனையில் சிகிச்சை அளித்துக்கொண்டிருக்கும் தனது தாயை சந்திக்க அவரின் சிறு வயது மகள் வந்தாள். ஆனால், தாயின் அருகே அவர் அனுமதிக்கப்படவில்லை. எனவே, தூரத்திலிருந்தே இருவரும் சைகையால் பேசிக்கொண்டனர். அணைப்பது போல் தாய் தனது கையை காட்ட, மகளும் அதே போல் காட்ட இருவரும் கதறி அழுதபடி கண்கலங்கி நிற்கின்றனர். அதன்பின் வீட்டிலிருந்து கொண்டு வந்த உணவை கீழே வைத்துவிட்டு சிறுமி அங்கிருந்து சென்றுவிட, அந்த செவிலித்தாய் அதை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார். இந்த வீடியோ பார்ப்பவரை கண்கலங்க செய்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News