×

கசந்து போன காதல்... மறுமணம் செய்ய பெற்ற குழந்தை கழுத்தறுத்து கொலை செய்த தாய்!

காதல் கணவனுடனான வாழ்க்கை கசந்து போனதால் மறுமணம் செய்ய தடையாக இருந்த 2 மாதக் குழந்தையை பெற்றோருடன் கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

மயிலாடுதுறை அருகே உள்ள மண்ணம்பந்தல் மூங்கில் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் கும்பகோணம் அருகே ராஜகிரியைச் சேர்ந்த பைரோஸ் பானு என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தாய் வீட்டிற்கு சென்ற பானு 2 மாத பெண் குழந்தை கமர்நிஷா உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். சந்தேகமடைந்த கணேசன் பாபநாசம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் நடத்திய விசாரணையில் குழந்தை கழுத்தை நெறித்துக் கொல்லப்பட்டது தெரிய வந்தது.

எதிர்ப்பைமீறி காதல் திருமணம் செய்து கொண்ட மகள் பைரோஸ் பானுவுக்கு மறுமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் திட்டமிட்டதாகவும், கணவருடனான காதல் கசந்த நிலையில் இருந்த பைரோஸ்பானுவும் சம்மதித்ததாகவும் கூறப்படுகின்றது.

இதற்கு 2 மாத குழந்தை கமர்நிஷா தடையாக இருக்கும் எனக் கருதி பைரோஸ் பானு, அவரது தந்தை அக்பர் அலி, தாய் மதீனா பீவி மற்றும் நண்பர் முகமது தல்கா ஆகியோர் குழந்தையின் கழுத்தை நெறித்து கொன்றதாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

From around the web

Trending Videos

Tamilnadu News