
Cinema News
பராசக்தி படத்தைக் கிண்டல் செய்த பத்திரிகை… சும்மா விடுவாரா கலைஞர்! அடுத்து நடந்ததுதான் ஹைலைட்!
Published on
தமிழ்ப்பட உலகில் கலைஞர் கருணாநிதி தவிர்க்க முடியாத ஒரு மேதை. இவரது எழுத்துகளில் ஜொலித்த படங்கள் ஏராளம் உண்டு. அந்தக் காலத்தில் எம்ஜிஆர், சிவாஜி என இரு ஜாம்பவான்களுக்கும் பல படங்களில் கலைஞர் வசனம் எழுதியுள்ளார். மந்திரி குமாரி, மருதநாட்டு இளவரசி, அபிமன்யு, புதுமைப்பித்தன், நாம், மலைக்கள்ளன், ராஜகுமாரி, காஞ்சித்தலைவன் ஆகிய எம்ஜிஆர் நடித்த படங்களில் வசனம் எழுதினார்.
இதையும் படிங்க… என்னங்க.. பொசுக்குனு இப்படி இறங்கிட்டீங்க… சூப்பர்ஸ்டாருக்கு தங்கையாகும் நயன்தாரா…
அதே போல ரங்கோன் ராதா, மாடிவீட்டு ஏழை, பணம், இருவர் உள்ளம், பராசக்தி, மனோகரா, திரும்பிப்பார் ஆகிய சிவாஜி நடித்த படங்களிலும் வசனம் எழுதினார். இவற்றில் சிகரம் வைத்தாற்போல இன்று வரை புகழ் பெற்றது பராசக்தி வசனம் தான். இப்போது கூட அந்தக் கோர்ட் சீன் பரபரப்பாகப் பேசப்படும்.
கலைஞர் கருணாநிதியின் கதை, வசனத்தில் உருவான படங்கள் என்றாலே அது தனி ரகம் தான். அந்தப் படத்தில் தமிழ் துள்ளி விளையாடும். பார்ப்பதற்கு பரவசமாக இருக்கும். அந்த வகையில் கலைஞரின் எழுத்தில் உருவான பாடாத தேனீக்கள், மாடி வீட்டு ஏழை, குலக்கொழுந்து படங்களில் நடித்தவர் ஸ்ரீபிரியா. இவர் கலைஞர் உடனான தனது திரையுலக அனுபவங்களைப் பற்றி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
படத்தின் வசனங்களை எனக்கு கலைஞர் சொல்லிக் கொடுத்தார். ஏதாவது பேசுவதற்க சிரமமாக இருந்தால் அதை நான் மாற்றித் தருகிறேன் என்றாராம். மனோரமாவுக்கு எல்லோரும் சேர்ந்து ஒரு பாராட்டு விழா நடத்தினோம். கலைஞரிடம் மனோரமா பற்றி ஒரு வாழ்த்துக் கட்டுரை வாங்க சென்றேன். அப்போது கட்டுரை தயாராக இருந்தது. அந்தக் கட்டுரையை என்னிடம் கொடுத்த உதவியாளர் கலைஞர் உங்களிடம் பேசணும்னு சொன்னார் என்றார். உடனே அவரிடம் தொடர்பு கொண்டு பேசினேன்.
கட்டுரையைப் படித்துப் பார்த்தாயா, இது போதுமா இன்னும் கொஞ்சம் நீளமாக வேணுமா என்றார் கலைஞர். எந்த ஒரு சின்ன விஷயத்தை செய்தாலும் எவ்வளவு நேர்த்தியாக செய்கிறார் என்பதைப் பார்த்து வியந்து போனேன். 100 ஆண்டுகளாக கோடிக்கணக்கான தமிழர்களின் உள்ளங்களில் கலைஞர் வாழந்து கொண்டு இருக்கிறார் என்றால் அதற்கு இதெல்லாம் தான் உதாரணம் என ஒரு கட்டுரையில் ஸ்ரீபிரியா பதிவு செய்துள்ளாராம்.
மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளரும், திரை விமர்சகருமான சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க… சிவபெருமானாக வந்து பாடிய சிவாஜி… கண்களால் செய்த அந்த லீலை.. மனுஷன் மாஸ் காட்டியிருக்காரே!
பராசக்தி படம் வெளியான போது பரபரப்பாக பேசப்பட்டது. காரணம் படத்தில் முத்தாய்ப்பாக இருந்த கலைஞரின் வசனம் தான். அந்த நேரத்தில் ஒரு துடுக்கான பத்திரிகை அந்தப் படத்தையும் கிண்டல் செய்து பரப்பிரம்மம் என்ற பெயரில் கார்டூனாக வெளியிட்டதாம். அதைக் கண்ட கலைஞர் சும்மா விடுவாரா என்ன? அதே பெயரில் ஒரு நாடகமே எழுதி தமிழகம் முழுவதும் நடத்தி அசத்தி விட்டாராம்.
சர்ச்சை நாயகன் பாலா : kpy பாலா மீது பல சர்ச்சைகள் அவரை சுற்றி சுழற்றி அடித்துக் கொண்டிருக்கிறது. இதுவரை பாலா...
Ajith Vijay: தமிழ் சினிமாவில் எப்படி எம்ஜிஆர் – சிவாஜிக்கு பிறகு ரஜினியும் கமலும் பல சாதனைகள், வெற்றிகளை குவித்து வந்தார்களோ...
சிம்புவுடன் இணைந்த வெற்றிமாறன்: தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் இந்திய சினிமாவில் முக்கிய, அதே சமயம் சிறந்த இயக்குனராக பார்க்கப்படுபவர் வெற்றிமாறன். இத்தனைக்கும்...
வடிவேலுவின் கோபம் : தற்போது சமூக வலைதளங்களில் வைகைப்புயல் வடிவேலுதான் பேசும் பொருளாக மாறி உள்ளார். அதற்கு காரணம் சமீபத்தில் அவர்...
தனுஷை வைத்து பல படங்களை இயக்கியவர் வெற்றிமாறன். தனுஷை வைத்து பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் போன்ற திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். இதில்...