Connect with us
Indian 2

Cinema News

இந்தியன் 2 படத்துல ஷங்கர் காட்டப்போகும் மாயாஜாலம்…! லைகாவுடன் பிரச்சனைக்கு கமல் வைத்த செக் !

நாட்டுல எங்கு பார்த்தாலும் ஊழல் ஊழல் ஊழல்… லஞ்சம்கற பேய் தலைவிரிச்சாடுது… அதை அழிக்கணும்னா அதுக்கு ஒரே ஆள் தான் இருக்காரு. அவர் தான் இந்தியன் தாத்தா.

இப்படி எதிர்பார்ப்புகளை எகிற வைத்துள்ளது இந்தியன் 2 டிரெய்லர். இந்த லஞ்சப்பேயை ஒழிக்க 96லயே குரலைக் கொடுத்தும் ஒரு பிரயோஜனமும் இல்லையே என திரும்ப வந்துட்டாரோ இந்தியன் தாத்தா என்றே எண்ணத் தோன்றுகிறது.

‘டாம் அண்ட் ஜெர்ரி ஆட்டம் ஆரம்பிச்சிடுச்சு’ன்னு சொல்றார் உலக நாயகன். இந்தியன் 2 டிரெய்லரில் இது தான் கமலின் பஞ்ச் டயலாக். அந்த அளவுக்கு செம டிரெண்டிங்ல போய்க்கிட்டு இருக்கு. இன்னைக்கு உள்ள 2கே கிட்ஸ்சுக்குப் பிடிக்கிற மாதிரி படத்துல பல விஷயங்களைக் கொண்டு வந்துள்ளார் இயக்குனர் ஷங்கர். இதுபற்றி பிரபல வலைப்பேச்சாளர் அந்தனன் என்ன சொல்றாருன்னு பார்ப்போம்.

Director Shankar

Director Shankar

இந்தியன் 2 மேல இருந்த ஒரு அவலத்தை இந்தியன் 2 டிரெய்லர் போக்கி இருக்கு. அதுல கமலோட பல கெட்டப்பைப் பார்க்க முடியுது. இன்னைக்கு இருக்குற ஊழல், லஞ்சத்தை சமூகம் எப்படிப் பார்க்குது? டைரக்டஷங்கர் இப்போ உள்ள 2 கே கிட்ஸ் எப்படி பார்க்குறாங்க. அதையெல்லாம் தாண்டி இது தான் உண்மை. இதை நீ உணர்ந்துக்கன்னு ஷங்கர் சார் சொல்லியிருப்பாருன்னு நினைக்கிறேன்.

இன்னொன்னு ஷங்கர் சார் படத்துல ஒரு சுவாரசியமான ஸ்கிரிப்ட் இருக்கும். அவரு சொல்ல வந்த கருத்துல வேணா உடன்பாடு சிலருக்கு இல்லாம இருக்கலாம். ஆனா படத்தைப் போரடிக்காத அளவுக்கு திரைக்கதையை வச்சிருப்பாரு.

ஆனா லைகாவுக்கும், கமலுக்கும் பிரச்சனை இருக்குறது உண்மை தான். இவன் பணம் தருவானா, மாட்டானாங்கற கண்ணோட்டத்துல தான் நடிகர்கள் பார்ப்பாங்க. அந்த மாதிரி நினைச்சி கமல் லைகாவைப் பார்த்தாரான்னு தெரியல. ஆனாலும் கமலிடம் இந்தியன் 3 ன்னு ஒரு பிடி கையில இருக்கு. என் சம்மதம் இல்லாம படத்தை ரிலீஸ் பண்ணக்கூடாதுன்னு சொன்னா அவ்ளோதான்.

இதையும் படிங்க… விஜயை தாண்டிய கமல்!.. இந்தியன் 2 பட டிரெய்லர் வீடியோ வியூஸ் எவ்வளவு தெரியுமா?!..

அப்போ ஒரு ஜாமினா அந்தப் படத்தை வச்சிக்கிட்டு இந்தப் படத்தை விட்டுக் கொடுத்துருக்கலாம். ஆக மொத்தம் ஏதோ பேசி முடிச்சிட்டாங்க. அதனால தான் படத்திற்கான புரொமோஷன் வேலைகள் எல்லாம் நடக்குது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top