×

இறந்துவிட்டதாக சொன்னவர் சினிமா பார்த்தார் – பரவை முனியம்மாவின் கம்பேக் !

சில மாதங்களுக்கு முன்னர் உடல்நிலை சரியில்லாததால் இறந்துவிட்டதாக சொல்லப்பட்ட நடிகை பரவை முனியம்மா உடல்நலம் சரியாகி சக்கர நாற்காலியில் வந்து சினிமா பார்த்தார்.

 

சில மாதங்களுக்கு முன்னர் உடல்நிலை சரியில்லாததால் இறந்துவிட்டதாக சொல்லப்பட்ட நடிகை பரவை முனியம்மா உடல்நலம் சரியாகி சக்கர நாற்காலியில் வந்து சினிமா பார்த்தார்.

நாட்டுப்புற பாடகியாக புகழ்பெற்ற பரவை முனியம்மா தூள் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பின்னர் பல படங்களில் காமெடி மற்றும் குணசித்திர நடிகையாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். இந்நிலையில் வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக அவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். அது சம்மந்தமான புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் ஒரு இணையதளம் பரவை முனியம்மா இறந்துவிட்டதாக அப்போது தவறான செய்தியை வெளியிட்டு சர்ச்சைகளில் சிக்கியது. அதன் பின் அவரே தோன்றி தான் உயிரோடு இருப்பதாக அறிவித்தார். இந்நிலையில் சில மாதங்கள் சிகிச்சைக்குப் பிறகு இப்போது அவர் மாயநதி எனும் திரைப்படத்தை சக்கரநாற்காலியில் வந்து பார்த்துள்ளார். விரைவில் அவர் சினிமாவிலும் நடிக்க வெண்டும் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News