×

காண்டம் போட மாட்டேன்... காசை திருப்பிக் கொடு.. பெண்ணை குத்திக் கொலை செய்த நபர்..

படுக்கையை பகிர சென்ற பெண்ணிடம் ஆணுறை போடுவது தொடர்பாக எழுந்த தகராறில் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

பெங்களூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வருபவர் முகுந்தா(42). கடந்த 11ம் தேதி தனது கிராமத்திற்கு செல்வதற்காக அவர் பேருந்து நிலையத்தில் காத்திருப்பதற்காக ஒரு பெண் தன்னுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள விருப்பமா எனக்கேட்டுள்ளார். மேலும் ரூ.2500 கொடுத்தால் தன்னுடன் உல்லாசம் அனுபவிக்கலாம் எனக்கூறியுள்ளார். ரூ.1500 என பேரம் படிந்து ரூ.500ஐ முன் தொகையாக பெற்று தனது வீட்டிற்கு அழைத்து சென்றார்.

அங்கு சென்ற பின் முகுந்தை ஆணுறை அணிந்து கொள்ளுமாறு அப்பெண் கூற முகுந்த் மறுத்துள்ளார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றியுள்ளது. அப்போது, தன் பணத்தை திருப்பிக் கொடுக்கும் படி முகுந்த கேட்க அவர் மறுத்துள்ளார். அப்போது வாக்குவாதம் முற்றி கோபமடைந்த முகுந்த வீட்டிலிருந்த கத்தியை எடுத்து அவரின் கழுத்து மற்றும் வயிற்றுப்பகுதிகளில் குத்தியுள்ளார். அதன்பின் அங்கிருந்து அவர் சென்றுவிட்டார்.

பள்ளிக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிய அப்பெண்ணின் மகள் தாய் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து கதறி அழுதார். அதன்பின், போலீசார் அங்கு சென்று அவரின் உடலை கைப்பற்றினர். விசாரணையில், அப்பெண் முகுந்தனை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு செல்லும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. எனவே, முகுந்தனை போலீசார் கைது செய்தனர். 

From around the web

Trending Videos

Tamilnadu News