×

கிரிக்கெட் வீரரின் பேட்டை திருடிய நபர் – டிவிட்டரில் புலம்பல் !

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கின் பேட்டை விமானநிலையத்தில் யாரோ திருடிவிட அதுசம்மந்தமாக டிவிட்டரில் அவர் புகார் சொல்லியுள்ளார்.

 

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கின் பேட்டை விமானநிலையத்தில் யாரோ திருடிவிட அதுசம்மந்தமாக டிவிட்டரில் அவர் புகார் சொல்லியுள்ளார்.

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்பஜன் சிங் கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வருகிறார். அதனால் ஐபிஎல் மற்றும் உள்ளூர் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார்.

இதையடுத்து அவர் நேற்று மும்பையில் இருந்து கோயம்புத்தூருக்கு இண்டிகோ விமானத்தில் வந்துள்ளார். ஆனால் கோவை விமானநிலையத்தில் அவர் கிட் பேக்கில் அவரது பேட்டைக் காணவில்லை. இது சம்மந்தமாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் புகார் ஒன்றைக் கூறியுள்ளார்.

அதில் அவர் திருடிய நபரைக் கண்டுபிடித்து கைது செய்யவேண்டும் எனக் கூறியிருந்தார். இதையடுத்து இண்டிகோ விமான நிர்வாகம் இது குறித்து அவரிடம் மன்னிப்புக் கேட்டுள்ளது. மேலும் விரைவில் இது சம்மந்தமாக நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News