×

காஜல் அகர்வால் பற்றி பரவிய வதந்தித்கு முற்றுப்புள்ளி வைத்த மேனேஜர்!

நடிகை காஜல் அகர்வால் பற்றி சமீபத்தில் ஒரு வதந்தி மிக வேகமாக பரவி வந்தது. அவர் தன் கைவசம் பல படங்கள் வைத்துள்ள நிலையில் தற்போது கொரோனா லாக்டவுன் காரணமாக வீட்டிலேயே இருக்கிறார்.

 

நிலைமை சரியாகி ஊரடங்கு முடிந்து மீண்டும் ஷூட்டிங் துவங்கும் போது தான் ஒப்பந்தம் ஆகியிருக்கும் படங்களுக்கு தேதிகள் பிரித்து கொடுப்பது மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கும். அதனால் ஒரு படத்தில் இருந்து வெளியேறிவிடுவது என முடிவு செய்திருப்பதாக செய்திகள் பரவியது.

சிரஞ்சீவி நடிக்கும் ஆச்சார்யா படத்தில் இருந்து தான் காஜல் வெளியேறவுள்ளார் என செய்திகள் பரவியது. ஏற்கனவே த்ரிஷா அந்த படத்தில் இருந்து பாதியில் வெளியேறினார், அதன்பிறகு தான் காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டார். தற்போது அவருக்கும் வெளியேறிவிட்டாரா என ரசிகர்கள் ஷாக் ஆகினர்.

இந்த செய்தி அதிகம் பரவிய நிலையில் காஜல் அகர்வாலின் மேனேஜர் விளக்கம் அளித்துள்ளார். "இந்த செய்தியில் உண்மை இல்லை. காஜல் ஆச்சார்யா படத்தில் நிச்சயம் நடிக்கிறார்" என அவர் கூறியதாக தெலுங்கு மீடியாக்களில் செய்தி வெளியாகியுள்ளது.

காஜல் அகர்வால் தமிழில் இந்தியன் 2, பிரிந்தா மாஸ்டர் இயக்குநராக அறிமுகமாகும் படம் என பல படங்கள் கைவசம் வைத்துள்ளார் காஜல் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் உதயநிதி ஸ்டாலினின் அடுத்த படத்தில் இருந்து காஜல் வெளியேறிவிட்டதாக இன்னும் உறுதிப்படுத்தப்படாத தகவல் உலா வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

From around the web

Trending Videos

Tamilnadu News