×

அமேசானில் வெளியாகிறதா மாஸ்டர்? - தயாரிப்பாளரிடம் கறார் காட்டிய விஜய்

விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் படப்பிடிப்பு முடிந்து மற்ற வேலைகள் நடந்து வந்த நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மாஸ்டர் பட பணிகள் முடங்கியுள்ளன. 
 

ஏப்ரல் 9ம் தேதி வெளியாக வேண்டிய இப்படம், கொரொனா ஊரடங்கு காரணமாக வெளியாகவில்லை. இதனால் விஜய் ரசிகர்கள் கடும் அதிருப்தியும், ஏமாற்றமும் அடைந்துள்ளனர். 

அதன்பின், இத்திரைப்படம் விஜயின் பிறந்த நாளான ஜூன் 22ம் தேதியன்று வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டதாக செய்திகள் வெளியானது. ஆனால், கொரோனா ஊரடங்கு முடிந்து தியேட்டர்கள் திறக்க இன்னும் 2 அல்லது 3 மாதங்கள் ஆகும் என்கிற நிலையில் படத்தை அமேசானில் வெளியிட திட்டமும் இருப்பதாக செய்திகள் கசிந்தது. 

அமேசான் தரப்பில் இருந்து மாஸ்டர் தயாரிப்பு தரப்பை அணுகி பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருப்பதை கேள்விப்பட்டு அதிர்ச்சியான விஜய் ‘நான் ரசிகர்களுக்காகத்தான் படங்களில் நடிக்கிறேன். எக்காரணத்தை கொண்டும் மாஸ்டர் திரைப்படம் ஓ.டி.டியில் வெளியாகக் கூடாது. எத்தனை மாதம் ஆனாலும் சரி. ஊரடங்கு முடிந்து எப்போது தியேட்டர்கள் திறக்கப்படுகிறதோ அப்போது படத்தை வெளியிடுவோம்’ என கறாராக கூறிவிட்டாராம். 

சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடித்து உருவான ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் அமேசானில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News