×

சிறுவனின் உடலினுள் இருந்த ஊசிகள் – ஸ்கேனில் பார்த்து அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் !

தெலங்கானா மாநிலத்தில் குழந்தையின் இடுப்புப் பகுதிக்குக் கீழே 15 க்கும் மேற்பட்ட ஊசிகள் இருந்ததைப் பார்த்து மருத்துவர்கள் மற்றும் பெற்றோர் அதிர்ச்சியாகியுள்ளனர்.

 

தெலங்கானா மாநிலத்தில் குழந்தையின் இடுப்புப் பகுதிக்குக் கீழே 15 க்கும் மேற்பட்ட ஊசிகள் இருந்ததைப் பார்த்து மருத்துவர்கள் மற்றும் பெற்றோர் அதிர்ச்சியாகியுள்ளனர்.

தெலங்கானா மாநிலத்தில் உள்ள வீபநகந்தலா எனும் கிராமத்தைச் சேர்ந்த பெற்றோர் அசோக் மற்றும் அன்னபூர்னா ஆகியோருக்கு லோகநாதன் என்ற மூன்று வயது மகன் உள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக அன்னபூர்னா தன் குழந்தையை குளிப்பாட்டுகையில் அவனது உடலில் இருந்து சிறு ஊசி மாதிரியான் பொருள் வெளியேறியுள்ளது.

அதை அவர் அலட்சியம் செய்து மருத்துவர்களிடம் காட்டாமல் இருந்துள்ளார். ஆனால் அதற்கடுத்த நாட்களில் குழந்தை மிகவும் சோர்வாகவும் சாப்பிட முடியாமலும் கஷ்டப்பட்டுள்ளான். இதையடுத்து மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்த போது அவனது உடலில் இடுப்புக்குக் கீழ் 15 க்கும் மேற்பட்ட ஊசிகள் இருந்துள்ளன. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் அறுவை சிகிச்சை செய்து ஒரு சில ஊசிகளை வெளியே எடுத்துள்ளனர்.

மற்ற ஊசிகளை அடுத்தடுத்த நாட்களில் அறுவை சிகிச்சை செய்து எடுக்கலாம் என சொல்லியுள்ளனர். ஆனால் சிறுவனின் உடலினுள் எப்படி அந்த ஊசி சென்றிருக்கும் என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News