Categories: Cinema News latest news

Kanguva: கங்குவா படத்தைப் பார்க்கும் ரசிகர்களுக்கு இது கியாரண்டி… புது போஸ்டர் சொல்லும் ரகசியம்!

கங்குவா படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கு ஒரு உணர்ச்சிமயமான தீவிர ஆக்ஷன் திரைப்படத்தைப் பார்த்த திருப்தி கிடைக்குமாம். நம்பிக்கைக்கும், பழிவாங்கலுக்கும் இடையேயான கடும் போர் தான் கங்குவா படத்தின் ஒன்லைன்.

நன்மைக்கும், தீமைக்கும் இடையிலான இறுதி முகம். நம்பிக்கை மற்றும் பழிவாங்கும் காவிய மோதல் தான் கங்குவா.

ஆக்ரோஷம்

சமீபத்தில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ கிரீன் தற்போது ஒரு போஸ்டரைப் பகிர்ந்துள்ளது. இது ஒரு காவிய மோதல் என்றும், நன்மைக்கும், தீமைக்கும் இடையிலான இறுதி முகம் என்றும் இந்தப் போஸ்டரில் தெரிவித்துள்ளது. அதில் சூர்யாவும், பாபிதியோலும் ஒருவருக்கு ஒருவர் கழுத்தைப் பதம் பார்க்கின்றனர். இருவருடைய முகத்திலும் ஆக்ரோஷம் தாண்டவமாடுகிறது.

சூர்யா போஸ்

சூர்யா நீண்ட தலைமுடியுடன் முகத்தில் ரத்தக்கோரையுடன் பற்களைக் கடித்தபடி பாபிதியோலின் கழுத்தில் கம்பியை வைத்து நெறித்த படி வெறித்துக்கொண்டு பார்க்கிறார். அதே நேரம் பாபி தியோல் சூர்யாவின் கழுத்தை இரு கைகளாலும் நெறித்தபடி பற்களைக் கடித்துக்கொண்டு அதே ரத்தக்கோரையுடன் வெறித்தபடி பார்க்கிறார்.

Also read: Vijayakanth: மாசத்துல பாதி நாள் விஜயகாந்த் இங்கதான் இருப்பாராம்.. தோண்ட தோண்ட அரிய தகவல்

சூர்யாவின் கைகளில் காணப்படும் டாட்டூஸ் மிகவும் வித்தியாசமான டிசைனுடன் காணப்படுகிறது. நரம்பு புடைக்க இருவரும் ஆக்ரோஷத்துடன் மோதும் காட்சியை இந்தப் போஸ்டரின் மூலம் நாம் உணர்ந்து கொள்ள முடிகிறது. திரையில் இந்த மகத்தான அனுபவத்தைக் காண இன்று மட்டும் தான் பாக்கி.

நாளை ரிலீஸ்

Kanguva

நாளை காலை ஒரு புதிய அனுபவத்துக்கு ரசிகர்கள் தயாராகலாம். இது ஒரு ஆக்டேன் சினிமா பயணத்தை வழங்கும் என்று தயாரிப்பு நிறுவனம் கியாரண்டி கொடுத்துள்ளது. இப்படி ஒரு தரமான சம்பவத்துக்குத் தான் இத்தனை நாளா வெயிட்டிங்னு ரசிகர்களே சொல்றாங்க.

புதிய சினிமா அனுபவம்

நீண்ட சடைமுடியுடன் வரும் சூர்யா, ஸ்மார்ட் லுக்குடன் வரும் சூர்யா என படத்தில் இரட்டை வேடம் போட்டுள்ளார் சூர்யா. இது மட்டுமல்லாமல் படத்தின் கதையைத் தற்போதைய காலகட்டத்துக்கு ஏற்ப வித்தியாசமாக எடுத்துள்ளார் இயக்குனர் சிறுத்தை சிவா.

Also read: Kanguva: கங்குவா படத்தின் ரிலீஸ்!… 90 நாள் தூங்காமல் தவிக்கும் முக்கிய பிரபலம்!… பின்ன இருக்காதா?!…

மிகப்பிரம்மாண்டமாகத் தயாராகி வரும் இந்தப் படம் புதிய சினிமா அனுபவத்தைத் தருவதாக உள்ளதால் திரையரங்குகளில் சென்று ரசிகர்கள் படம் பார்த்தால் மட்டுமே அந்த உயரிய அனுபவத்தைப் பெற முடியும் என்பதே உண்மை.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v