×

சன் டிவியில் சூரரைப்போற்று - சூர்யா ரசிகர்களுக்கு அடுத்த அதிர்ச்சி

இறுதிச்சுற்று திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் சுதா கொங்கரா. அதன்பின் சூர்யாவை வைத்து சூரரைப்போற்று திரைப்படத்தை இயக்கினார். இப்படத்தை சுர்யா தனது சொந்த பட நிறுவனமான 2டி எண்டர்டெயின்மெண்ட் மூலம் தயாரித்தார். ஆனால், படம் தயாராகி வெளியாகும் நிலையில் கொரோனா ஊரடங்கால் பட வெளியீடு தள்ளிப்போனது.
 

4 மாதங்கள் ஆகியும் திரையரங்குகள் திறக்கப்படாத நிலையில், இப்படத்தை அமேசான் பிரைமில் வெளியிட அப்படத்தின் தயாரிப்பாளர் சூர்யா முடிவெடுத்துள்ளார். இந்த தகவலை அவரே தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இப்படம் வருகிற் 30ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், எப்படியும் இந்த திரைப்படம் தியேட்டரில் வெளியாகும் என காத்திருந்த சூர்யா ரசிகர்களுக்கு இந்த செய்தி கடும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. எனவே, தியேட்டரில் பார்க்கும் அனுபவம் அமேசான் பிரைமில் கிடைக்காது. எனவே, ஓடிடி வேண்டாம். தியேட்டரில் ரிலீஸ் பண்ணுங்க என பலரும் கதறி வருகின்றனர். 

தற்போது மேலும் ஒரு அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. இப்படத்தை சன் தொலைக்காட்சி நிர்வாகம் ரூ.15 கோடி விலைக்கு வாங்கியுள்ளது. 2021 பொங்கல் பண்டிகையில் இப்படம் ஒளிபரப்பாகும் எனத்தெரிகிறது. தியேட்டரில் வெளியாகி மூன்றே மாதத்தில் சன் தொலைக்காட்சியில் இப்படம் வெளியாவது சூர்யா ரசிகர்களுக்கு மேலும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News