×

கணவர்,குழந்தைகள் தூங்கியதும் தற்கொலை செய்துகொண்ட நர்ஸ் – அதிரவைக்கும் காரணம் !

சென்னையில் வெளிநாட்டில் வேலைக்கு சேர்வது சம்மந்தமா எழுந்த பிரச்சனையில் சென்னையை சேர்ந்த நர்ஸ் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

 

சென்னையில் உள்ள ஆவடி, பட்டாபிராம் தீனதயாளன் நகர் காந்தியடிகள் தெருவைச் சேர்ந்த தம்பதிகள் சதீஷ்ஜோஷிரீனா. இவர்களுக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் ஆன நிலையில் ரேச்சல், ஜான் பிரபாகர் ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர்.

தனியார் மருத்துவமனையில் நர்சாக பணி புரிந்து ஒரு மாதத்துக்கு முன்னதாக தனது வேலையை ராஜினாமா செய்துள்ளார். மேலும் சிங்கப்பூர் சென்று நர்ஸாக வேலை பார்க்க முயற்சி செய்துள்ளார். ஆனால் இது அவரது கணவர் மற்றும் பெற்றோருக்குப் பிடிக்கவில்லை எனத் தெரிகிறது. இது சம்மந்தமாக நேற்று முந்தினம் குடும்பத்தாருடன் தகராறு எழுந்துள்ளது.

இந்நிலையில் கணவர் மற்றும் குழந்தைகள் தூங்கிய பின்னர் அவர் மற்றொரு அறைக்கு சென்று தூக்குமாட்டித் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்ததுடன் ஜோஷிரீனா உடலை கைபற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News