×

ரவுடித்தனமாக பழக்கடைகளை தள்ளிவிட்ட அதிகாரியை பணிநீக்கம் செய்ய வேண்டும் - ராகவா லாரன்ஸ்

ரவுடித்தனமாக சாலையோர பழக்கடைகளை தள்ளிவிட்ட அதிகாரியை பணிநீக்கம் செய்ய வேண்டும் என ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ் என்பவர் அந்த பகுதியில் தெருவோரம் இருந்த பழ கடைகளை ரவுடித்தனமாக கீழே தள்ளி பழங்களை வீணாக்கும் வீடியோ வைரலானது.

 

இவரது செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். அந்த வீடியோவை பார்த்து ஷாக் ஆன நடிகர் ராகவா லாரன்ஸ் அந்த அதிகாரியை உடனே பணியில் இருந்து நீக்கும்படி முதலமைச்சருக்கு வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார்.

லாரன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: "இந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுத்து உடனே பணிநீக்கம் செய்யும்படி மாண்புமிகு முதலமைச்சருக்கு வேண்டுகோள் வைக்கிறேன்."

"எத்னையோ போலீஸ் அதிகாரிகள், தூய்மை பணியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தன்னிகரில்லா சேவையை தினமும் செய்து வருகின்றனர். அவர்கள் உயிரை ஆபத்தில் வைத்து அவர்கள் பணியாற்றுகிறார்கள். ஆனால் இப்படி சில பொறுப்பில்லாத அதிகாரிகளால் அனைத்து பெயரும் கெடுகிறது. அவர்கள் என்ன தவறு செய்திருந்தாலும், உணவை வீணாக்குவது தான் மிகப்பெரிய தவறு."

"உணவின் மதிப்பு என்ன என்பது எனக்கு தெரியும். ஒரு நபருக்கு உணவளிக்க எவ்வளவு கஷ்டப்படவேண்டும் என்பதும் தெரியும். இதை முதலமைச்சர் பார்த்து உடனே நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறேன்" என லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News