×

ஆம்புலன்ஸை நிறுத்தி பக்கோடா வாங்கிய முதியவர் – இதெல்லாம் நியாயமா தாத்தா?

தென்காசியில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவரை அழைத்து செல்ல வந்த ஆம்புலன்ஸை நிறுத்தி வைத்துவிட்டு முதியவர் கடைக்கு சென்று பக்கோடா வாங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசியில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவரை அழைத்து செல்ல வந்த ஆம்புலன்ஸை நிறுத்தி வைத்துவிட்டு முதியவர் கடைக்கு சென்று பக்கோடா வாங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் தற்போது கொரோனா அதிகமாகவுள்ள மாவட்டங்களில் திருநெல்வேலியும் ஒன்றாக உள்ளது. அங்கு நேற்று வரை 824 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அந்த மாவட்டத்தில் தென்காசி பகுதியிலும் இப்போது பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டு வருகிறது.

இந்நிலையில் தென்காசிக்கு அருகில் உள்ள புளியந்தோப்பு எனும் பகுதியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்ப்ட்ட ஒரு முதியவரை ஏற்றிச் செல்ல ஆம்புலன்ஸ் வந்துள்ளது. முதியவர் தன் உடைமைகளை ஆம்புலன்ஸ் அருகே வைத்துவிட்டு, அருகில் உள்ள கடைக்கு சென்று பக்கோடா வாங்கி வந்துள்ளார். இந்த சம்பவமானது ஆம்புலன்ஸில் வந்த அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் முதியவர் கையில் கையுறையும் முகத்தில் மாஸ்க்கும் அணிந்திருந்ததாக சொல்லப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News