×

பல மொழிகளில் ஹிட்டான ஒரே கதை… பார்ட் 2 க்கு பூஜை போட்ட சூப்பர் ஸ்டார்!

மலையாளத்தில் மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் உருவான திருஷ்யம் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.

 

மலையாளத்தில் மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் உருவான திருஷ்யம் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.

2015 ஆம் ஆண்டு வெளியான மலையாளத்தில் மோகன்லால், மீனா மற்றும் ஆஷா சரத் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் திருஷ்யம் . மிகப்பெரிய வெற்றி பெற்ற அந்த திரைப்படம் அதுவரை மலையாள சினிமாவின் வசூல் சாதனையை எல்லாம் முறியடித்தது. அதுமட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு , கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் இந்தியைத் தவிர மற்ற மொழிகளில் எல்லாம் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. அதற்கு அவர்கள் படத்தை சரியாக எடுக்காததே காரணம் என சொல்லப்பட்டது.

இந்நிலையில் இப்போது 5 ஆண்டுகளுக்குப் பிறகு மோகன்லால் நடிக்க ஜீத்து ஜோசப்பே இயக்க இருக்கும் திருஷ்யம் 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இது சம்மந்தமானப் புகைப்படங்களைப் படக்குழு வெளியிட்டுள்ளது. இது மலையாள சினிமா ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News