யஷ்ஷை முந்தும் நானி!.. தி பாரடைஸ் டீசர் எப்போ ரிலீஸ் தெரியுமா?..

 
nani

நடிகர் நானி நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட திரைப்படமான ‘தி பாரடைஸ்’ படத்தின் டீசர் வெளியாகும் தேதியை  படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் நானியுடன் கயாடு லொஹர், மோகன் பாபு, சோனாலி குல்கர்னி மற்றும் ராகவ் ஜூயல் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்தின் கதை 1980-களின் செகந்திராபாத் நகரின் சேரி பின்னணியில் நடக்கிறது. அமைப்பு ரீதியான ஒடுக்குமுறை, சமூக பாகுபாடு மற்றும் அதிகார துஷ்பிரயோகத்திற்கு எதிராக போராடும் பழங்குடியின மக்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டதாக படம் உருவாகியுள்ளது. 

paradise

கன்னட நடிகர் யஷ் நடிக்கும் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் ஆகஸ்ட் 8-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், நானியின் ‘தி பாரடைஸ்’ டீசர் ஆகஸ்ட் 6ம் தேதி வெளியாகிறது. மேலும் , தொடர்ந்து டீசர் மற்றும் ட்ரெயிலர் வெளியாவதால் தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் இரு படங்களின் மீதான எதிர்பார்ப்பும் ஒரே நேரத்தில் அதிகரித்துள்ளது.

சமூகப் பின்னணி, சரித்திர உணர்வு மற்றும் அதிரடி கலந்த கதைக்களத்துடன் உருவாகும் ‘தி பாரடைஸ்’, நானியின் திரைப்பட பயணத்தில் மேலும் ஒரு முக்கியமான படமாக அமையும் என திரையுலக வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.

Tags

From Around the web