Categories: Cinema News latest news

நயன் – விக்கி குழந்தையின் வாடகைத்தாய் இவங்கதானாம்!..சர்ச்சையில் சிக்கிய மற்றொரு சம்பவம்!..

தமிழ் சினிமாவின் தற்போதைய சர்ச்சைக்குள்ளான ஜோடி யாரென்றால் நடிகை நயன் தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் தம்பதி தான். இந்த வாடகைத்தாய் விவகாரம் வருவதற்கு முன் இவர்களை கொண்டாடிய ரசிகர்கள் இருந்து வந்தனர்.

ஆனால் எப்பொழுது ட்விட்டரில் அந்த ஒரு ட்விட்டை பதிவிட்டாரோ விக்னேஷ் சிவன் அதிலிருந்தே பல சர்ச்சைக்கு ஆளாகிவிட்டனர் நயனும் விக்கியும். சாதாரண ரசிகர்களில் இருந்து அரசியல் வரை இந்த விவகாரம் சூடுபிடித்துள்ளது.

இதையும் படிங்க : வயசாச்சுனு பாக்கீங்களா?..இப்ப கூட அதுக்கு நான் ரெடி!..வர இளசுகளுக்கு காசு கொடுக்க தயாரான கே.ராஜன்!..

எப்படி இது சாத்தியம்? முறையான வழிமுறைகளை பின்பற்றியிருக்கின்றனரா என்ற பல கேள்விகள் இவர்கள் முன் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இவர்களை பற்றி மற்றுமொரு செய்தி இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இந்த வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டவர்கள் அந்த வாடகைதாயை பற்றி எந்த ஒரு தகவலையும் வெளிப்படுத்த மாட்டார்கள்.

ஆனால் விக்கி- நயனின் வாடகைத்தாய் யார் என்ற தகவல் இப்போது வெளியாகி அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நயன் தாராவின் நெருங்கிய உறவுக்கார பெண் தான் இந்த வாடகைதாய் என்ற தகவல் வெளியாகியிருக்கிறதாம். மேலும் அந்த பெண்ணுக்கு வாடகைத்தாய்க்கு உண்டாக அனைத்து தகுதியும் இருந்ததனால் தான் இந்த வழிமுறையை பின்பற்றினோம் என்றும் நயன் தரப்பில் கூறப்படுவதாக தெரிகிறது. மேலும் அந்த வாடகைத்தாய் பெண் எந்த முறையில் நயனுக்கு உறவு என்பது தெரியவில்லை. இந்த சம்பவம் இப்போது மற்றுமொரு சர்ச்சைக்கும் விதையாக இருக்கும் என தெரிகிறது.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini