×

கட்சி மட்டும் போதும்.. முதல்வர் பதவி வேண்டாம்.... ரஜினியின் அதிரடி முடிவு

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாய் அறிவித்து ஒன்றரை வருடங்கள் ஆகிவிட்டது. ஆனாலும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதே நேரம் ஒருபக்கம் தனது கட்சிக்கான நிர்வாகிகளை நியமித்து வந்தார். அவ்வப்போது அவர்களை சந்தித்து பேசியும் வந்தார்.
 

இந்நிலையில், சென்னையில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் தனது மாவட்ட செயலாளர்களை நேற்று சந்தித்து உரையாடினார்.  இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. காரணம், இந்த சந்திப்பிற்கு பின் அவரின் அரசியல் நடவடிக்கை சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், கட்சியை மட்டுமே தான் வைத்துக்கொண்டு, முதல்வர் பதவியில் வேறு ஒருவரை அமர வைக்கும் திட்டம் ரஜினிக்கு இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அதாவது, தனது கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் நிலை வந்தால் தனக்கு மிகவும் நம்பிக்கைக்கு உரிய ஒருவரை முதல்வர் பதவியில் அமர்த்திவிட்டு தான் கட்சியை வழிநடத்தும் திட்டம் ரஜினியிடம் இருப்பதாக கூறப்படுகிறது. 

இதனால்தான், ரசிகர்களிடம் ரஜினியியே முதல்வர் என்கிற இமேஜை  அகற்றுவதற்கான முயற்சியே நேற்றைய பேட்டியில் ‘நிறைய விஷயங்கள் பேசினோம். இதில் அனைவருக்கும் திருப்தி. ஆனால், எனக்கு ஒரு விஷயத்தில் திருப்தி இல்லை. ஏமாற்றமே. அது என்னவென்று அப்புறம் சொல்கிறேன்’ எனக்கூறினார் என அரசியல் விமர்சகர்கள் கூற துவங்கி உள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News