×

ஆசை ஆசையாக ரயிலில் பொங்கல் வாங்கிய நபர்… பிரித்து பார்த்த போதுதான் அதிர்ச்சி!

ரயிலில் ஒப்பந்தகாரர்கள் வழங்கும் பொங்கலின் விலையால் அதிர்ச்சியான பயணி ஒருவர் கடுப்பாகி புகார் அளித்துள்ளார்.

 

ரயிலில் ஒப்பந்தகாரர்கள் வழங்கும் பொங்கலின் விலையால் அதிர்ச்சியான பயணி ஒருவர் கடுப்பாகி புகார் அளித்துள்ளார்.

திருச்சியில் இருந்து சென்னைக்கு வந்த பல்லவன் ரயிலில் எட்வர்ட் ராஜ் என்ற முதியவர் பயணம் செய்துள்ளார். அப்போது அவர் ரயிலில் விற்கப்படும் பொங்லை வாங்கியுள்ளார். விலையைக் கேட்டததற்கு விற்பனையாளர் 80 ரூபாய் என சொல்லி முதல் அதிர்ச்சியை கொடுத்துள்ளார். சரியென்று வாங்கினால் அந்த டப்பாவில் பொங்கல் 50 கிராம் அளவுக்கே பொங்கல் இருந்துள்ளது. இதைப் பார்த்த அவர் மேலும் அதிர்ச்சியாகி விற்பனையாளரிடம் புகார் செய்துள்ளார்.

மேலும் டிடிஆர் உள்ளிட்ட ரயில்வே நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார். ஆனால் அவர்கள் இது ஒப்பந்தக்காரர்கள் கொடுக்கும் சாப்பாடு நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என சொல்லியுள்ளனர். இதையடுத்து அந்த பொங்கல் டப்பாவோடு வீடியோ ஒன்றை எடுத்து சமூகவலைதளத்தில் பரப்பியுள்ளார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக, பலரும் ரயில்வேயில் தனியார்மயத்தைக் கொண்டுவந்தால் இதுதான் நிலைமை என அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News