×

நயன்தாராவை அசிங்கமாக திட்டிய நபர்... தக்க பதிலடி கொடுத்த காதலன்!

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் காதலித்து வருகின்றனர் என்பது அனைவருக்கும் தெரியும். சமீபத்தில் அன்னையர் தினத்தன்று நயன்தாரா அவரது அம்மாவுடன் இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு அவருக்கு அன்னையர் தின வாழ்த்து கூறி இருந்தார்.

 

"Mrs.குரியனுக்கு அன்னையர் தின வாழ்த்துக்கள். ஒரு அழகான குழந்தையை (நயன்தாரா) வளர்த்து நீங்கள் சிறந்த பணி செய்துள்ளீர்கள்" என விக்னேஷ் சிவன் கூறியிருந்தார்.

விக்னேஷ் சிவன் வெளியிட்டிருந்த அந்த புகைப்படங்கள் இதுவரை பார்த்திடாதவை என்பதால் அது இணையத்தில் அதிகம் வைரலானது.

வழக்கமாக எப்போதும் பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டால் அவர்களை ட்ரோல் செய்வதற்கென்றே ஒரு கூட்டம் இருக்கும். அப்படி விக்னேஷ் சிவன் பதிவிட்ட போஸ்டிலும் சிலர் விமர்சித்துள்ளனர்.

"முதலில் உங்க அம்மாவுக்கு அன்னையர் தின வாழ்த்துக்கள் சொல்லுங்க" என சில மோசமான வார்த்தைகளில் ஒரு நபர் விக்னேஷ் சிவனை திட்டியிருந்தார்.

அவருக்கு பதில் கொடுத்த விக்னேஷ் சிவன், "வாழ்த்துக்கள் கூறிவிட்டேன். உங்களுக்கும் Happy Mothers Day.. உங்களை போன்ற ஒரு அழகான, மரியாதை தெரிந்த, இரக்க மனம் கொண்ட ஒருவரை அவர் பெற்றெடுத்துள்ளாரே" என மறைமுகமாக அந்த நபரை தாக்கியுள்ளார்.
 

From around the web

Trending Videos

Tamilnadu News