×

சிறுவனுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த நபர்…. 3 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த தண்டனை!

மதுரையில் 12 வயது சிறுவனுக்குப் பாலியல் தொல்லைக் கொடுத்த நபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

 

மதுரையில் 12 வயது சிறுவனுக்குப் பாலியல் தொல்லைக் கொடுத்த நபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

மதுரை ஜெய்ஹிந்த் புரத்தைச் சேர்ந்த வாலிபர் நிஜார் அலி. இவர் அதே பகுதியில் வசித்து வரும் 12 வயது சிறுவன் ஒருவனுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்துள்ளார். இது சம்மந்தமாக சிறுவனின் பெற்றோர் போலிஸில் புகார் கொடுக்க நிஜார் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்படார்.

இந்நிலையில் 3 ஆண்டுகளாக இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் அவர் மீதான குற்றம் நிரூபணம் ஆனதால், அவருக்கு  7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 10000 ரூபாய் அபராதமும் விதித்துள்ளது, மதுரை மகிளா நீதிமன்றம்.

From around the web

Trending Videos

Tamilnadu News