×

அரைபோதையில் வீட்டு முன் நிர்வாணமாக தூங்கிய நபர்… பக்கத்து வீட்டுக்காரரால் ஏற்பட்ட கொடூரம்!

திருப்பூரில் குடித்துவிட்டு போதையில் வீட்டு முன் நிர்வாணமாக விழுந்து கிடந்த நபரை பக்கத்து வீட்டுக்காரரால் கொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

திருப்பூரில் குடித்துவிட்டு போதையில் வீட்டு முன் நிர்வாணமாக விழுந்து கிடந்த நபரை பக்கத்து வீட்டுக்காரரால் கொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் கோல்டன் நகர் பகுதியில் சுரேஷ்குமார் என்பவரும் செல்வம் என்பவரும் பக்கத்து பக்கத்து வீடுகளில் வசித்து வந்துள்ளனர். இருவருக்கும் நீண்ட காலமாக தொழில் ரீதியாக பகை இருந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு முழுபோதையில் வந்த சுரேஷ் குமார் வீட்டுக்கு வந்துள்ளார். போதையில் இருந்ததால் வீட்டுக்குள் சென்று படுக்காமல் ஆடைகள் கலைந்து நிர்வாணமாக தெருவிலேயே கிடந்துள்ளார்.

இந்நிலையில் அங்கு வந்த செல்வம் அவரை எழுப்பி வீட்டினுள் போக சொல்லியுள்ளார். போதையில் இருந்த தன்னை எழுப்பிய செல்வத்தை ஆபாசமாக திட்ட ஆரம்பித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது. ஒரு கட்டத்தில் கோபமான செல்வம் அருகில் கிடந்த கல்லை எடுத்து சுரேஷின் தலையில் போட்டுள்ளார். இதில் பலத்த காயமடைந்த சுரேஷ் உயிரிழந்துள்ளார். இது சம்மந்தமாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News