Categories: Cinema News latest news

இததான் எதிர்பார்த்தோம்! ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பில் இருந்து வெளியான அஜித் – த்ரிஷா ஸ்டில்

Vidamuyarchi Movie: தமிழ் சினிமாவில் அஜித் ஒரு மாபெரும் நடிகராக வளர்ந்து நிற்கிறார். அதற்கு காரணம் அவரின் தன்னம்பிக்கையும் கடின உழைப்புமே.எந்தவொரு சினிமா பின்புலமும் இல்லாமல் தானாகவே கஷ்டப்பட்டு இந்த இடத்தை அடைந்திருக்கிறார்.

தற்போது அஜித் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு முழுவதும்  அஜர்பைஜானில் நடத்த திட்டமிட்டிருக்கின்றனர். ஏற்கனவெ அங்கு உள்ள வானிலை காரணமாக ஒருவார காலம் படப்பிடிப்பிற்கு பிரேக் கொடுத்திருப்பதாக தகவல் வெளியானது.

இதையும் படிங்க: அப்பவே அந்த வேலையைப் பற்றி அப்பட்டமாக சொன்ன தேங்காய் சீனிவாசன்… என்ன படத்தில் தெரியுமா?

ஆனால் எப்படியும் பிப்ரவரியில் படப்பிடிப்பை முடித்து ஏப்ரலில் திரைக்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இதுவரை அஜித்தின் ஏர்போர்ட் வீடியோ மற்றும் புகைப்படங்கள் மட்டுமே வைரலான நிலையில்,

tirsa

இன்று அஜித் த்ரிஷா இருக்கும் புகைப்படம் இன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. அஜித்துடன் த்ரிஷா இருக்கும் அந்தப் புகைப்படம் ஏற்கனவே ஏர்போர்ட்டில் இருவரும் செல்லும் போது எடுத்திருக்கலாம் என்றே தெரிகிறது.

இதையும் படிங்க: தடுமாறி கீழே விழுந்த விஜய்! தள்ளிவிட்ட நபரை அடி வெளுந்து வாங்கிய புஸ்ஸி ஆனந்த் – வைரலாகும் வீடியோ

ஆனால் இந்தப் புகைப்படம் இப்போதுதான் வெளியிடப்பட்டு வைரலாகி வருகின்றது. அஜித்தை பார்க்க விரும்பும் ரசிகர்கள் இப்படி ஏதாவது ஒரு வகையில் புகைப்படத்தை பார்த்தோ அல்லது ஏர்போர்ட்டிலோ பார்த்து  மகிழலாம்.

விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்துவதற்கு கூட விடாமுயற்சி படப்பிடிப்பில் இருந்த அர்ஜுன் நேரடியாக வந்து அஞ்சலி செலுத்தி விட்டு சென்றார். ஆனால் அஜித் வர முடியாத சூழ் நிலை என தெரிவித்து பிரேமலதா மற்றும் சுதீஷுக்கு தொலைபேசி வாயிலாக தன் இரங்கலை தெரிவித்திருக்கிறார். இதை எந்த வகையில் ஏற்றுக் கொள்வது என தெரியவில்லை.

இதையும் படிங்க: காலையில் ஒரு படம்… மாலையில் இன்னொன்னு… தூங்காமல் நடித்து கொடுத்த விஜயகாந்த்..! 56 நாட்களில் ரிலீஸ்..!

Published by
Rohini