×

முரளிதரனின் கையை உடைக்க சொன்னார் அந்த வீரர் – சோயிப் அக்தர் உடைத்த ரகசியம்!

முத்தையா முரளிதரன் பேட் செய்யும் போது அவரின் கைவிரலை உடைக்க சொல்லி தன்னிடம் யூசுப் யுஹானா கூறியதாக அக்தர் சொல்லியுள்ளார்.

 

முத்தையா முரளிதரன் பேட் செய்யும் போது அவரின் கைவிரலை உடைக்க சொல்லி தன்னிடம் யூசுப் யுஹானா கூறியதாக அக்தர் சொல்லியுள்ளார்.

உலக கிரிக்கெட் அளவில் மிக அதிக வேகத்தில் பந்துவீசிய பவுலர் என்ற சாதனையை சோயிப் அக்தர் தன் வசம் வைத்துள்ளார். இதனால் அவர் காலத்தில் அவர் பந்தை எதிர்கொள்ள பேட்ஸ்மேன்களே அஞ்சி நடுங்குவார்கள். அப்படி என்றால் பவுலர்களின் நிலை என்ன என்று சொல்லியா தெரியவேண்டும்.

இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் ‘இந்திய அணி வீரர்கள் சிலர் எங்களை பார்த்து பந்தை எறிய வேண்டாம். எங்களுக்கு குடும்பம் உள்ளது என சொல்வார்கள். அதே போல இலங்கையின் முத்தையா முரளிதரன் பொறுமையாக வீசினால் நான் அவுட் ஆகி விடுகிறேன் என சொல்வார். ஒருமுறை யூசுப் யுஹானா முரளிதரன் பேட் செய்த போது பந்துவீசி அவர் விரலை ஒடித்துவிடு. அவர் சுழலில் என்னால் சரியாக விளையாடமுடியவில்லை என சொன்னார்’ எனக் கூறியுள்ளார். அகதர் சொல்லியுள்ள தகவல்கள் சர்ச்சைகளை உருவாக்கியுள்ளன.

From around the web

Trending Videos

Tamilnadu News