×

கெட்டுப்போன இறைச்சியை சாப்பிட்ட 800 பேரின் பரிதாப  நிலை – 5 வயது சிறுவன் பலி!

ஜோர்டான் நாட்டில் பாதி விலைக்கு விற்கப்பட்ட இறைச்சியை சாப்பிட்ட 800 பேர் உடல்நலக்கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

ஜோர்டான் நாட்டில் பாதி விலைக்கு விற்கப்பட்ட இறைச்சியை சாப்பிட்ட 800 பேர் உடல்நலக்கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜோர்டான் நாட்டில் கோழி இறைச்சியை முறையாக குளிர்சாதனப் பெட்டியில் பாதுகாகாமல் வைத்திருந்ததால் பல ஆயிரக்கணக்கான கோழி இறைச்சி கெட்டுப் போயுள்ளது. ஆனாலும் அதை அழிக்க மனது வராத உணவகம் ஒன்று அதை ஷவர்மா செய்து பாதி விலைக்கு விற்பதாக அறிவித்துள்ளது.

இதனால் அந்த உணவகத்துக்கு வழக்கமாக வரும் கூட்டத்தை விட அதிக கூட்டம் வந்துள்ளது. அந்த சிக்கன் ஷவர்மாவை சாப்பிட்ட 800 க்கும் மேற்பட்டவர்களுக்கு புட் பாய்சன் ஆகி உடல் நிலை மோசமாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் அதில் ஒரு 5 வயது சிறுவன் பலியாகியுள்ளான். இந்த சம்பவமானது அந்த நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விநியோகிக்கப்பட்ட இறைச்சியில் பாக்டீரியா இருந்ததாக ஆய்வக சோதனைகள் கூறுகின்றன என்று அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதுஇதையடுத்து காவல்துறை சம்மந்தப்பட்ட உணவகத்தின் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News