Categories: Cinema News latest news

நீங்க அனிருத் கிட்ட போங்க… லோகேஷுக்கு அட்வைஸ் செஞ்சி அனுப்பி வைத்த கைதி பிரபலம்…

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 2019ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான படம் ‘கைதி’. ட்ரீம் வாரியர்ஸ் சார்பாக எஸ்.ஆர்.பிரபு தயாரித்திருந்த இப்படத்திற்கு சாம் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் கதாநாயகி, பாடல்கள் என ஏதும் இல்லையென்றாலும் படத்தின் தீம் மியூசிக்கை போட்டு சும்மா அதிர வைத்திருப்பார் இசையமைப்பாளர் சாம் சி.எஸ்.

இப்படத்தின் வெற்றியையடுத்து லோகேஷ் விஜய்யை வைத்து ‘மாஸ்டர்’என்ற படத்தை இயக்கினார். இந்த படத்திற்கு இசையமைப்பாளராக சாம் சி.எஸ். அணுகிய லோகேஷுக்கு சாம் இந்த படத்திற்கு அனிருத்தை சென்று பாருங்கள் என்று அறிவுரை சொன்னாராம். இதனை, சாம் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசியிருந்தார்.

அந்த வகையில், விஜய் மீண்டும் மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து தனது 67வது திரைப்படத்தை துவக்க திட்டமிட்டுள்ளாராம். இந்த திரைப்படம் முழுக்க முழுக்க லோகேஷ் கனகராஜ் திரைப்படம் போல இருக்கும் என கூறப்படுகிறது. இந்த படத்திற்கும் சாம் சி.எஸ். இணைவாரா என்று சில ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இதையும் படிங்களேன்- பள்ளிக்கூடத்துக்கு போகிற பெண்ணை மீண்டும் ஹீரோயினாக்கி விட்டுடீங்களே.?! லாரன்ஸ் மீது கோபத்தில் ரசிகர்கள்…

இதற்கு இடையில், கைதி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவும் லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளாராம். இந்த படத்தில் இருப்பீர்களா.? என்ற கேள்விக்கு சாம் சி எஸ் இருப்பேன் என்று தெரிவித்துள்ளார். இது குறித்த அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Manikandan
Published by
Manikandan