Categories: Cinema News latest news throwback stories

போற போக்குல கொளுத்திப் போட்ட ரஜினி!.. கடுங் கோபத்திற்கு ஆளான சத்யராஜ்!..எங்கு வெடித்தது தெரியுமா உரசல்?..

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு பாணி, உடல் அசைவுகளை கொண்டு முன்னனி  நடிகராக வலம் வந்தவர் நடிகர் சத்யராஜ். 80களில் ரஜினி, கமல் இவர்களுக்கு சரியான வில்லனாக சத்யராஜ் நடித்துக் கொண்டிருந்தார். சினிமா மீதுள்ள ஆர்வத்தால் பெரிய சொத்துக்களுக்கு அதிபதியாக இருந்த சத்யராஜ் சென்னைக்கு வந்துவிட்டார். சிவக்குமார், மணிவன்னன் இவர்கள் எல்லாம் ஒரே ஊர்க்காரர்கள் என்பதால் அவர்களின் தயவு எளிதாக கிடைத்தது சத்யராஜுக்கு.

மணிவன்னன் செய்த உதவி

மணிவன்னன் இயக்கிய நூறாவது நாள், 24 மணி நேரம் போன்ற படங்களில் சத்யராஜை வில்லனாக நடிக்க வைத்தார் மணிவன்னன். படம் மாபெரும் வெற்றி பெற்று தொடர்ந்து ஒரு வருடத்தில் 20 க்கும் மேற்பட்ட படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. ரஜினியுடன் தம்பிக்கு எந்த ஊரு, மிஸ்டர் பரத்,  நான் சிகப்பு மனிதன் போன்ற வெற்றிப்படங்களுக்கு மற்றுமொடு முக்கிய காரணமாக அமைந்தது சத்யராஜின் வில்லத்தனமான நடிப்பு தான்.

rajini

ஆனால் என்னவோ ரஜினியுடன் நடிக்க ஆரம்பித்ததில் இருந்தே சத்யராஜுக்கும் ரஜினிக்கும் ஒரு இணக்கமான உறவு இருந்ததே இல்லை என்று பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு கூறினார். மேலும் அவர் கூறிய செய்தி மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. என்னவெனில் தமிழே சரிவர பேச தெரியாத ரஜினி தமிழ் மக்களிடம் இந்த அளவுக்கு பேர் வாங்கி விட்டாரே என்ற எண்ணம் எப்பொழுதும் சத்யராஜ் மனதில் இருந்து கொண்டே இருக்குமாம்.

ரஜினி கிண்டல் பேச்சு

இதற்கேற்றாற் போல ரஜினியும் சத்யராஜும் கலந்து கொண்ட படப்பிடிப்பில் இவர்களுக்கு இடையே அப்பொழுது தான் சில உரசல் ஆரம்பித்திருக்கிறதாம். என்னவெனில் தம்பிக்கு எந்த ஊரு படத்தில் ரஜினிம் சத்யராஜ், நடிகை சுலக்‌ஷனா, நடிகை மாதவி, நடிகர் செந்தாமரை ஆகியோர்  நடிக்க படம் மாபெரும் வெற்றி பெற்றது. அந்தப் படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் இதற்கு முன் சத்யராஜை மாதவி பார்த்ததே இல்லையாம். அப்போது காரில் இறங்கிய சத்யராஜை பார்த்து மாதவி இவர் யாரென்று ரஜினியிடம் கேட்டாராம்.

rajini

80களின் காலகட்டத்தில் ரஜினி மிகவும் கிண்டலும் கேலியுமாக படப்பிடிப்பை கொண்டு செல்வாராம். அப்பொழுது மாதவி  இந்த கேள்வி கேட்டதும் ‘இவர தெரியாதா? பெரிய அமெரிக்கா புரஃபஷர், ஹாலிவுட் பிலிம் சிட்டியில் புரஃபஷராக இருக்கிறார், ஃபிரேம்களை எங்கு வைக்கனும் வைக்கக் கூடாது என்று இவருக்கு எல்லாமே தெரியும்’ என்று சும்மா தமாஷாக சொல்லிவிட்டு போய்விட்டாராம்.

உடனே சத்யராஜ் உள்ளே வந்ததும் மாதவியின் அருகில் அமர மாதவி ஆங்கிலத்தில் சரளமாக பேசக்கூடியவர் என்பதால் சத்யராஜிடம் தன்னுடைய சந்தேகங்களை ஆங்கிலத்தில் கேட்க சத்யராஜிற்கு அந்த அளவுக்கு ஆங்கிலம் தெரியாததால் திணறியிருக்கிறார். இதை ஓரமாக பார்த்துக்கொண்டிருந்த சுலக்‌ஷனா சிரிக்க அவரை வரவழைத்து மாதவியிடம் பேச சொல்லியிருக்கிறார் சத்யராஜ்.

என்னையே ஓவர் டேக் பண்ணிருவான்

அதன் பிறகு தெரிந்தது இது ரஜினியின் வேலை என்று. அதிலிருந்து கோபப்பட்ட சத்யராஜ் இரண்டு நாள்கள் படப்பிடிப்பிற்கே வரவில்லையாம். மூன்றாவது நாள் வந்தவர் யாரிடமும் பேசவில்லையாம். இது ஒரு பக்கம் என்றால் மிஸ்டர் பரத் படத்திலும் இவர்கள் பிரச்சினை தொடர்ந்திருக்கிறது. படத்தின் காட்சிகளை போட்டு பார்த்த ரஜினி சத்யராஜின் நடிப்பை பார்த்து ‘இவர் என்னையே ஓவர் டேக் பண்ணி போயிருவார் போல, நான் வில்லனும் அவர் ஹீரோவுமாக தெரிகிறதே’ என்று அதையும் கிண்டலாக கூறியிருக்கிறார்.

rajini

அதன்பின் எஸ்.பி,முத்துராமன் படத்தில் நிறைய காட்சிகள் வெட்டி எடுக்க வேண்டியிருக்கிறது. ஹீரோவோடு நகரும் கதை என்பதால் சத்யராஜின் காட்சிகளை தான் கட் பண்ண வேண்டியிருக்கு என்று சொன்னதும் அதுவும் சத்யராஜுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியதாம்.

காவிரி நீர் பிரச்சினை

மற்றொரு சம்பவம் 10 வருடங்களுக்கு முன் கர்நாடகாவில் காவிரி நீர் பிரச்சினையால் தமிழக மக்கள் அவதிப்படுவதை எதிர்த்து நடிகர் சங்கம் சார்பாக போராட்டம் நடத்தினார்கள். அப்போது பேசிய சத்யராஜ் நடிகர் ரஜினியை மறைமுகமாக தாக்கி சரமாரியாக பேசினார். ஆனால் ரஜினியோ எந்த ஒரு கோபமும் இல்லாமல் அமைதியாகவே இருந்திருக்கிறார். இப்படி சில பல பிரச்சினைகள் இருக்க ஒரு பேட்டியில் சத்யராஜின் மகன் சிபிராஜ் என் அப்பாவிற்கும் ரஜினிக்கும் ஒரு பிரச்சினையும் இல்லை. சிவாஜி படத்திற்காக வில்லனாக  நடிக்க என் அப்பாவை அணுகினார்கள். அப்பா ஏகப்பட்ட படங்களில் பிஸியாக இருந்ததால் நடிக்க முடியவில்லை. இதை ஊதி பெருசாக்கிவிட்டார்கள் பத்திரிக்கையாளர்கள் என்று கூறியிருந்தார்.

rajini

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini