ஓம் படத்திற்கு வந்த சிக்கல்!.. திட்டமிட்டபடி வெளியாகுமா?...

 
om movie


ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திரைப்படம் ஓம். இந்த திரைப்படம் வருகிற 20-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்த படத்தில் மம்முட்டி, சாய் பல்லவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரைலர் வீடியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருக்கிறது. இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் இடையே நிலவிவரும் சதவீத பங்கு பிரச்சனை காரணமாக ஓம் திரைப்படம் சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள தனித் திரையரங்குகளில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது..

படத்தின் விநியோக உரிமையை ஏ.ஜி.எஸ் நிறுவனம் பெற்றுள்ளது. மல்டிபிளக்ஸ் திரையரங்குகளுக்கு லாபத்தில் 20 சதவீதம், ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு 80 சதவீதம் என பேசி முடிக்கப்பட்டுள்ளது. தனி திரையரங்குகளுக்கு தியேட்டர் அதிபர்களுக்கு 30 சதவீதம், விநியோகஸ்தர்களுக்கு 70 சதவீதம் என்கிற அடிப்படையில் மட்டுமே விநியோகம் செய்ய முடியும் என கூறப்பட்டிருக்கிறது. ஆனால் அதை தியேட்டர் அதிபர்கள் ஏற்கவில்லை. அதற்கு மேலும் அதிக சதவீதம் கேட்பதாக சொல்லப்படுகிறது..

எனவே, சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓம் படம் வெளியாகுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. இடையில் ஒரு நாள் இருப்பதால் கண்டிப்பாக இந்த பிரச்சனை பேசி தீர்க்கப்பட்டு விடும் எனவும் சொல்லப்படுகிறது.

Murugan ..
Murugan ..

5170 Articles

Murugan Manickam is an experienced digital journalist with 10 years of expertise in online news reporting. He specializes in covering cinema and political news. Con tact: mugas123@gmail.com

Tags

From Around the web