Categories: Cinema News latest news

குத்தாட்டமும் இல்ல.. கொண்டாட்டமும் இல்ல! கேப்டன் மறைவிற்கு அஜித் வராததற்கு முக்கிய காரணம்

Actor Ajith:  நேற்றைய தினம் முதல் அஜித் ஒரு பெண்ணுடன் ஆடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. துபாயில் புத்தாண்டை தன் குடும்பத்துடன் கோலாகலமாக கொண்டாடும் அஜித்தின் புகைப்படங்கள் வீடியோக்கள் என ஒவ்வொன்றாக சமூக வலைதளங்களில் வந்து கொண்டே இருந்தது.

இதை பார்த்து கடுப்பான ரசிகர்கள் கேப்டன் மறைவிற்கு வராமல் அஜித் அங்கு ஜாலியாக கும்மாளம் போட்டுக் கொண்டிருக்கிறார் என்றும் அமீர்கானுக்காக போட்ட எடுத்துகிட்டு வந்த அஜித் கேப்டனுக்காக ஃபிளைட்டில் ஏறி வர முடியாதா என்று பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தனர்.

இதையும் படிங்க: அத பாத்து நானே பயந்து போயிட்டேன்!.. விஜயகாந்தின் 30 வருட டிரைவர் சொன்ன பகீர் தகவல்..

ஆனால் அஜித்தை பொறுத்தவரைக்கும் எந்தவொரு விழாவானாலும் துக்க காரியமானாலும் கலந்து கொள்ள இயலாதவர். அதுவும் அசல் படத்திற்கு தான் அஜித் இப்படி மாறிவிட்டார் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் கேப்டனுக்காக அஜித் எப்படியும் ஓடி வந்துவிடுவார் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஆனால் செல்போன் வாயிலாக பிரேமலதா மற்றும் சுதீஷ் ஆகியோரிடம் தொடர்பு கொண்டு அஜித் தன் இரங்கலை தெரிவித்தார் என்று செய்திகள் வெளியாகின. ஆனால் அது எந்தளவுக்கு  உண்மை என்று தெரியவில்லை.

இதையும் படிங்க: முடிஞ்சா என்னைத்தாண்டி போங்க! சவுக்குக்கட்டைய கையில் எடுத்த விஜயகாந்த் – அமைதியான மாணவர்கள்

ஏனெனில் அவரது அஜித் தரப்பில் இருந்து எதாவது ஒரு செய்தி வெளியாகிறது என்றால் கண்டிப்பாக அது அவரது மேலாளரான சுரேஷ் சந்திராவிடம் இருந்துதான் முதலில் அறிவிப்பு வெளியாகும் . அதனால் இந்த இரங்கலை பற்றி சுரேஷ் சந்திராவும் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் அஜித் ஏன் வரவில்லை என்பதற்கான உண்மையான காரணம் இன்று வெளியாகியிருக்கின்றது. கேப்டன் இறப்பதற்கு மூன்று நாள்கள் முன்புதான் அஜித் விடாமுயற்சி படத்தின் சண்டைக் காட்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாராம்.

இதையும் படிங்க: துண்டக் காணோம் துணியக் காணோம்னு திரியும் துஷாரா விஜயன்.. மார்கழி குளிருக்கு இதமான மசால் வடை!..

டூப் வைத்துக் கொள்ளலாம் என்று எவ்வளவு கூறியும் அதை மீறி அவரே நடித்ததால் அவர் காலில் அடிப்பட்டிருக்கிறதாம். அதனால் துபாயில் ஒரு மூன்று  நாள்கள் மருத்துவமனையில் அஜித் அனுமதிக்கப்பட்டாராம். அதன் காரணமாகவேதான் அஜித்தால் வரமுடியவில்லை என்று கூறப்படுகிறது. அப்போ வெளியான புகைப்படங்கள், வீடியோக்கள் என முன்பு எடுக்கப்பட்டதாக கூட இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini