Connect with us
rajini seeman

Cinema News

ரஜினி – சீமான் ரெண்டு பேருமே போட்ட ஸ்கெட்ச்!.. சந்திப்பு நடந்ததன் பின்னணி!..

Rajinikanth: நடிகர் ரஜினியும் இயக்குனர் மற்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளருமான சீமானும் சமீபத்தில் சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏனெனில், ரஜினியை மிகவும் கடுமையாக விமர்சித்தவர் சீமான். அதுவும் ரஜினி அரசியலுக்கு வருவதாக சொல்லியபோது அதை கடுமையாக எதிர்த்தார்.

ரஜினியை நடிகராக மற்றுமே ஏற்றுக்கொள்வோம். தமிழகத்தை ஆள்வதென்றால் அது ஒரு தமிழராக மட்டுமே இருக்க வேண்டும் என தொடர்ந்து விமர்சித்து வந்தார். ஒருபக்கம், அரசியலுக்கு வருவதாக சொன்ன ரஜினி உடல்நிலையை காரணம் காட்டி அதிலிருந்து பின் வாங்கினார்.

இதையும் படிங்க: கங்குவா பட சர்ச்சை.. பெர்ஷனல் வரைக்கும் போனது தப்பு! சத்யராஜ் பகிர்ந்த தகவல்

சில திரைப்படங்களை இயக்கியுள்ள சீமான் சில படங்களில் நடித்தும் இருக்கிறார். ஒருகட்டத்தில் சினிமாவை விட்டு தீவிர அரசியலில் இறங்கினார். தமிழகத்தில் உள்ள எந்த ஒரு அரசியல் கட்சியோடும் கூட்டணி அமைக்காமல் தொடர்ந்து தேர்தல் களத்தை சந்தித்து வருகிறார்.

இடையில் நடிகர் விஜய்க்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து வந்தார். அவர் அரசியல் கட்சி துவங்குகிறார் என அறிவித்ததும் விஜய் விரும்பினால் அவரோடு இணைந்து பயணிப்பேன் என சொன்னார் சீமான். ஆனால், திராவிடமும், தமிழ் தேசியமும் ஒன்று என தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் விஜய் பேசியது சீமானை கோபப்படுத்தியது.

எனவே, விஜயை கடுமையாக விமர்சித்தார். ‘ஒன்று இந்த பக்கம் வா.. அல்லது அந்த பக்கம் போ.. நடுவில் நின்றால் லாரியில் அடிபட்டி செத்து போவ’ என காட்டமாக பேசினார் சீமான். இது விஜய் ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து சீமானின் தம்பிகளும், விஜய் ரசிகர்களும் சமூகவலைத்தளங்களில் கடுமையாக மோதி வருகிறார்கள்.

seeman

#image_title

இந்நிலையில்தான் சீமான் – ரஜினி சந்திப்பு நடந்துள்ளது. ரஜினியை சந்தித்தது பற்றி கேட்டதற்கு சினிமா மற்றும் அரசியல் தொடர்பாக பேசினோம் என பதில் சொன்னார் சீமான். அரசியலுக்கு வரவில்லை என சொல்லிவிட்டாலும் அரசியலை கூர்ந்து கவனித்து வருபவர் ரஜினி. இன்னமும் அரசியலில் தன்னை ஒரு கிங் மேக்கராக உணர்ந்து வருகிறார் ரஜினி. அதை காட்டும் விதமாகவே அவர் சீமானை சந்தித்ததாக கருதப்படுகிறது.

சீமானோ விஜய் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகி விட்டார். எனவே, 2026 சட்டமன்ற தேர்தலில் கண்டிப்பாக விஜய் ரசிகர்கள் சீமானுக்கு ஓட்டுப் போட மாட்டார்கள். எனவே, ரஜினி ரசிகர்களின் ஆதரவு கிடைப்பதற்காகவே அவர் ரஜினியை சந்திக்க முடிவெடுத்ததாக சொல்லப்படுகிறது.

அரசியல் என்றாலே ஒரு கணக்குதான் போல!…

இதையும் படிங்க: கயல் முதல் மருமகள் வரை… சன் டிவியின் டிஆர்பி ஹிட் சீரியல்களின் இன்றைய புரோமோ அப்டேட்…

author avatar
சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top