Categories: Cinema News latest news

பூஜா ஹெக்டே ஃபிளாப் படங்களாக நடிப்பதற்கு இதுதான் காரணமா?? பாவத்த!!

தென்னிந்தியாவின் டாப் நடிகையாகவும் தனது மெழுகு டால் போன்ற மேனியால் இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டவராகவும் திகழ்ந்து வரும் பூஜா ஹெக்டே, மிஷ்கின் இயக்கிய “முகமூடி” திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானார்.

Pooja Hegde

அதன் பின் தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் மிகவும் பிசியான நடிகையாக வலம் வந்தார். சமீபத்தில் விஜய் நடித்த “பீஸ்ட்” திரைப்படத்திலும் நடித்திருந்தார் பூஜா ஹெக்டே. எனினும் அத்திரைப்படம் சரியான வரவேற்பை பெறவில்லை.

மேலும் பூஜா ஹெக்டே தெலுங்கில் நடித்த “ராதே ஷ்யாம்”, “ஆச்சார்யா” ஆகிய திரைப்படங்களும் சரியான வரவேற்பை பெறவில்லை. அதே போல் கடந்த 23 ஆம் தேதி ஹிந்தியில் வெளியான “சர்க்கஸ்” திரைப்படமும் சரியாக கைக்கொடுக்கவில்லை. இவ்வாறு தொடர்ந்து பல சுமாரான திரைப்படங்களிலேயே பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.

Beast and Acharya

இந்த நிலையில் பூஜா ஹெக்டே தொடர்ந்து இவ்வாறு சுமாரான திரைப்படங்களில் நடிப்பதன் காரணத்தை குறித்து பிரபல தயாரிப்பாளரான சித்ரா லட்சுமணன் தனது வீடியோ ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

“ராதே ஷ்யாம், ஆச்சார்யா, பீஸ்ட் ஆகிய திரைப்படங்களின் கதைகளை எல்லாம் கேட்டு அதில் நடிக்கலாமா வேண்டாமா என்று முடிவெடுப்பதற்கான உரிமை பூஜா ஹெக்டேவிடமா இருக்கிறதா? அந்த படங்களின் கதாநாயகர்களிடத்தில்தான் அந்த உரிமை இருக்கிறது.

இதையும் படிங்க: இளையராஜா ஸ்டூடியோவில் பாக்யராஜ்ஜை லெஃப்ட் ரைட் வாங்கிய பாரதிராஜா… யார் காரணம்ன்னு தெரிஞ்சா அசந்துப்போய்டுவீங்க!!

Pooja Hegde

இத்திரைப்படங்களில் நடித்த நடிகர்கள் டாப் நடிகர்கள் என்பதால், இவர்களுடன் நடித்தால் போதும் என்று நினைக்கிற கதாநாயகியாகத்தான் பூஜா ஹெக்டே இருக்கிறார். அவர் நடித்த திரைப்படங்களில் அவரின் பங்களிப்பும் மிகக் குறைவு. ஆதலால் இதில் பூஜா ஹெக்டேவை குறை சொல்லவே முடியாது” என்கிறார் சித்ரா லட்சுமணன்.

Arun Prasad
Published by
Arun Prasad