Categories: Cinema News latest news

‘விசில் போடு’க்கு பின்னாடி இப்படி ஒரு சம்பவம் இருக்கா? ‘கோட்’ படம் குறித்து முக்கிய அப்டேட் சொன்ன பிரபலம்

GOAT  Movie: கோலிவுட்டில் ஒரு வசூல் சக்கரவர்த்தியாக வலம் வருபவர் நடிகர் விஜய். இப்போது அரசியல்வாதியாகவும் தன்னுடைய அடுத்த கட்ட பயணத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் இப்போது தயாராகிக் கொண்டு வரும் திரைப்படம் கோட். வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் விஜய் நடிக்கும் திரைப்படம் தான் கோட்.

விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி, சினேகா ஆகியோர் நடிக்க இவர்களுடன் சேர்ந்து லைலா, பிரசாந்த் பிரபுதேவா, அஜ்மல் போன்ற பல முக்கிய நடிகர்களும் நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு முக்கால்வாசி நடந்து முடிந்த நிலையில் படத்திற்கான ஒரு பாடல் காட்சி மட்டும் இன்னும் படமாக்க வேண்டியுள்ளது.

இதையும் படிங்க : தனுஷின் கண்களைப் பார்த்ததும் நடிக்க முடியாமல் திணறிய நடிகர்… அப்படி என்னதான் நடந்தது?

அந்த பாடல் காட்சியை சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் படமாக்கப் போவதாக தெரிவித்துள்ளார்கள். அதுவும் அந்த பாடல் ஒரு குத்து பாடலாக இருப்பதால் விஜயுடன் சேர்ந்து திரிஷா இந்த பாடலில் நடனம் ஆடுவதாக தெரிகிறது .இந்த நிலையில் அந்த படத்தில் நடித்த நடிகர் அஜ்மல் சமீபத்திய ஒரு பேட்டியில் கோட் படம் குறித்து அவருடைய சில அனுபவங்களை கூறியிருக்கிறார்.

கோட் படத்தை பற்றியும் விஜய் பற்றியும் எந்த ஒரு கேள்வி கேட்டாலும் மழுப்பிக் கொண்டே பதில் சொல்லும் அஜ்மல் விஜய் பற்றி தான் மிகவும் வியந்து பார்த்ததாக கூறினார். மேலும் அவரிடம்  ‘இந்த கோட் படத்தில் சிஎஸ்கே அணியில் இருந்து ஒரு மூன்று பேர் கேமியோ ரோலில் நடிப்பதாக ஒரு தகவல் வெளிவந்து கொண்டிருக்கிறது.அது உண்மையா?’ என தொகுப்பாளினி ஒருவர் கேட்க அதற்கு பதில் அளித்த அஜ்மல் அது இப்போது என்னால் சொல்ல முடியாது. வெங்கட் பிரபுவே உரிய நேரத்தில் அதற்கான பதிலை கூறுவார் என அந்த கேள்வியில் இருந்து தப்பித்துக் கொண்டார்.

இதையும் படிங்க: வேட்டையன் படத்தின் காட்சிகள் லீக்… இந்த முன்னணி பிரபலமும் இருக்காரா?

மேலும் இந்த படத்தின் முதல் சிங்கிள் விசில் போடு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் நிலையில் அந்த பாடலில் இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி ஒரு சிறிய கேமியோவில் நடிக்கலாம் என்றும் ஊடகங்கள் செய்திகளை பரப்பி வருகின்றன. அதனால்தான் விசில் போடு என்ற வரியை கூட வைத்திருப்பார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini