என் குழந்தை கலைஞ்சிபோச்சு....CM விஜய் தான் - பிரஸ்மீட்டில் கதறிய ஜூலி!
பிக்பாஸ் ஜூலி:
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டு பிரபலமான ஜூலி பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலமாக சின்னத்திரை பெரிய திரை ரசிகர்களிடையே பிரபலமானார் .

இதனிடையே தா.வெ.க தலைவர் விஜய் குறித்தும் தா.வெ.க கட்சியை குறித்தும் அவ்வப்போது அவதூறு பேசி சமூக வலைதளவாசிகளின் வெறுப்புக்கும் உள்ளாகி வருபவர் ஜூலி. விஜய் பிரச்சாரம் மேற்கொண்டதில் இருந்தே தேர்தல் பரப்புரையின் போதிலிருந்தும் தொடர்ந்து அவரைப் பற்றி அவதூறு கருத்து தெரிவித்து மக்களின் வெறுப்புக்கு ஆளாகினார் .
ஜூலி புகார்:
இந்த நிலையில் தற்போது ஜூலி பத்திரிக்கையாளர்களை சந்தித்து ஒரு அதிர்ச்சிக்குரிய தகவலை தெரிவித்து தெரிவித்துள்ளார். ஆம் திமுக ஆதரவாளராக கருதப்படும் ஜூலி தமிழக முதல்வர் சி ஜோசப் விஜய் அவர்கள் மீது பகிரங்கமான குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்திருக்கிறார் .
அதில் அவர் கூறி இருப்பதாவது.... கடந்த மார்ச் மாதம் விஜய் சாரோட ஆதரவாளர்கள் என் மீது சுமத்திய வீண் பழியால் போலீஸ் ஸ்டேஷனுக்கு அலைஞ்சிட்டு இருந்தேன். அப்போது வயிற்றில் இருந்த என்னுடைய முதல் குழந்தை கலைஞ்சிடுச்சு. விஜய் சார் வேண்டுமென்றால் 51 உயிர் போனதுக்கு தான் காரணம் இல்லை என்று சொல்லலாம்.

குழந்தை கலைந்தது:
ஆனால், என் குழந்தையின் உயிர் போனதுக்கு விஜய் சார் தான் மிக முக்கியமான காரணம். சமூக வலைதளங்களில் தொடர்ந்து விஜய்யின் ரசிகர்கள் என்னை மோசமாக திட்டி வந்ததால் ஏற்பட்ட மன உளைச்சலே என் குழந்தை கலைந்ததற்கு மிக முக்கியமான காரணம்.
எனவே என் குழந்தை கலைந்ததற்கு முதல்வர் விஜய் அவர்கள் முழுக்க முழுக்க காரணம் என பகிரங்கமாக விஜய் மீது குற்றம் சுமத்தி இருக்கிறார். தொடர்ந்து விஜய் குறித்து அவதூறு பேசி வந்த ஜூலி தற்போது எல்லையை மீறி விஜய்யின் மீது பகிரங்கமான குற்றச்சாட்டு வைத்திருப்பது விஜய்யின் தொண்டர்களை அதிருப்தி அடையச்செய்துள்ளது.
