×

பிக்பாஸ் முடிஞ்சு ஒரு படம் கூட நடிக்கல.. சனம் ஷெட்டிதான் காரணம்.. தர்ஷன் பரபரப்பு பேட்டி

பிக்பாஸ் புகழ் தர்ஷன் தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதாகவும், நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் திருமணம் செய்து கொள்ள மறுப்பதாகவும் சனம் ஷெட்டி கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.
 

ஆனால், இந்த புகாரை தர்ஷன் மறுத்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய போது ‘ பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த பின் எனக்கு சினிமா வாய்ப்புகள் வர துவங்கியது. ஆனால், எங்கு சென்றாலும் என்னை அழைத்து செல்ல வேண்டும். உனக்கு கதாநாயகியாக நான்தான் நடிப்பேன் என சனம் ஷெட்டி என்னை கட்டாப்படுத்தினார். ஒரு கட்டத்தில் என் வளர்ச்சிக்கு அவர் தடையாக இருப்பதை உணர்ந்து அவரை விட்டு விலகினேன். தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டினார். என்னை புக் செய்த தயாரிப்பாளர்களிடம் சென்று என்னை வைத்து படம் எடுக்க வேண்டும் எனக்கூறினார்’ என அவர் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News