அருள்நிதியின் அடுத்த அதிரடி விருந்து... 'அருள்வான்' வெளியீட்டு தேதி வெளியானது!..

 
arul

நடிகர் அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள 'அருள்வான்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2013-ஆம் ஆண்டு வெளியான 'தகராறு' திரைப்படத்திற்குப் பிறகு, அருள்நிதி மற்றும் கணேஷ் வினாயகன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள இரண்டாவது படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இப்படத்தை 'தகராறு' படத்தை இயக்கிய கணேஷ் வினாயகன் இயக்கியுள்ளார்.  இந்தப் படத்தில் அருள்நிதியுடன் ஆரவ் மற்றும் ரம்யா பாண்டியன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் காளி வெங்கட், ஜான் விஜய் உள்ளிட்டோர் முக்கிய துணைக் கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர்.

arul

90 பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் எஸ்.ஜி. சரவணன் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். எம். சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தின் திரையரங்கு வெளியீட்டை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் மேற்கொள்கிறது.

கிராமத்து பின்னணியில் அதிரடி மற்றும் விறுவிறுப்பான கதைக்களத்துடன் உருவாகியுள்ள 'அருள்வான்' திரைப்படம், அருள்நிதியின் வித்தியாசமான கதைத்தேர்வுகளில் மேலும் ஒரு முக்கிய படமாக இருக்கும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் இந்த திரைப்படம், வருகிற ஜூலை 17, 2026 அன்று தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளனர்.

Tags

From Around the web