
Cinema News
துப்பாக்கி கொடுத்தவருக்கே துப்பாக்கி காட்டிய சிவகார்த்திகேயன்.. பராசக்திக்கு நாள் குறிச்சாச்சு..
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு என்ற போட்டியின் மூலம் அறிமுகம் கிடைத்தது. தனது தனி திறமையால் அந்த சீசனில் சிவகார்த்திகேயன் வென்றார். அது மட்டும் இல்லாமல் விஜய் டிவியில் ரியாலிட்டி ஷோக்களின் தொகுப்பாளராகவும் பணியாற்றினார். அதுவரை தொகுப்பாளர் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற நிலைமையை உடைத்து ஆங்கரிங் ஸ்டைலில் புதுமை கொண்டு வந்தவர் சிவகார்த்திகேயன்.
தனது கலகலப்பான பேச்சால் அரங்கில் இருப்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து நிகழ்ச்சியை சுவாரசியமாக கொண்டு செல்வார். அதிலும் ’அது இது எது’ நிகழ்ச்சி இவரை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றது. அதன் காரணமாக இவருக்கு இயக்குனர் பாண்டி ராஜ் இயக்கத்தில் ’மெரினா’ படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து தன்னுடைய ஜானர் காமெடி கதைகளை தேர்வு செய்து மக்கள் மத்தியில் சென்றடைந்தார்.
அடுத்தடுத்த படங்களில் தன்னை புதுப்பித்துக் கொண்ட சிவகார்த்திகேயன் வெகு விரைவிலயே தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் பட்டியலில் இணைந்தார். கடந்தாண்டு வெளியான அமரன் திரைப்படம் இவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது. அதுமட்டுமில்லாமல் அந்த படம் சுமார் 300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சிவாவின் கெரியர் பெஸ்டாக அமைந்தது.

தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்துள்ள மதராஸி திரைப்படம் வெளியாகி உள்ளது. படம் வெளியான நாளிலிருந்தே பாசிட்டிவ் விமர்சனங்கள் வர தொடங்கியுள்ளது. இந்த படம் ஏ.ஆர்.முருகதாஸுக்கு மிக மிக முக்கியமான திரைப்படம் ஏனென்றால் இவர் வெற்றி என்பதை ருசித்து பல வருடங்கள் ஆகிவிட்டது. முருகதாஸ் பல வெற்றி படங்களை கொடுத்த முன்னணி இயக்குனராக இருந்தாலும் சமீபத்தில் இவரின் படங்கள் எதுவும் பேர் சொல்லும் அளவிற்கு வெற்றி பெறவில்லை.
அவுட் டேட்டட் இயக்குனர், சரக்கு தீர்ந்து போன இயக்குனர் என மோசமான விமர்சனங்கள் ஏ.ஆர்.முருகதாஸ் மீது வந்தாலும் அவரை நம்பி சிவா இந்த படத்தைக் கொடுத்துள்ளார். படத்தின் வரவேற்பை பார்க்கும் பொழுது முருகதாஸ் நம்பிக்கையை காப்பாற்றி உள்ளார் என்பது தெரிகிறது. இதனால் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் முதல் ஐந்து நடிகர்களின் பட்டியலில் இணைந்துள்ளார்.
கோட் படத்தில் விஜய் துப்பாக்கியை சிவகார்த்திகேயனிடம் கொடுப்பார். அன்றிலிருந்து சிவகார்த்திகேயனை அடுத்த தளபதி இவர்தான் திடீர் தளபதி என விமர்சனங்கள் வந்தது. ஆனால் இந்த மாதிரி பட்டங்கள் எதுவும் எனக்கு வேண்டாம் என்று மதராஸி இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் சொல்லிவிட்டார். சிவகார்த்திகேயன் தனது அடுத்த ரிலீஸிக்கு தயாராகி வருகிறார். அந்த வகையில் சுதா கொங்கார இயக்கத்தில் சிவா நடித்து வரும் ’பராசக்தி’ திரைப்படம் வருகிற 2026 பொங்கல் அன்று வெளியாகும் என பட குழு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதே தேதியில் தான் விஜயின் கடைசி படமான ’ஜனநாயகன்’ படமும் வெளியாக இருக்கிறது. விஜய் மூத்த நடிகர், அவருக்கு இது கடைசி படம் என சிவா ஒதுங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விடாபிடியாக அதே நாளில் தான் நானும் வருவேன் என்று தற்போது அதிகாரப்பூர்வமாக பராசக்தி வெளியீட்டு தேதி பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
பராசக்(தீ) பரவட்டும் என்ற வசனத்தோடு வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் பராசக்தி வெளியீடு தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் துப்பாக்கி கொடுத்தவருக்கே சிவகார்த்திகேயன் துப்பாக்கி காட்டிட்டாரே என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.