×

ரீமேக் செய்யப்படும் தி கிரேட் இந்தியன் கிச்சன்... எந்த முன்னணி நடிகை நடிக்க இருக்கிறார் தெரியுமா?

பெரிய வரவேற்பை பெற்று இருக்கும் தி கிரேட் இந்தியன் கிச்சன் படம் தமிழில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது.
 

ஜியோ பேபி எழுதி இயக்கி, நீஸ்ட்ரீம் எனும் புதிய மலையாள ஓடிடி தளத்தில் வெளியாகிய திரைப்படம், தி கிரேட் இந்தியன் கிச்சன். சமையலறையை வைத்து அதில் நடக்கும் அரசியலை சொல்லிய இப்படம் பலரையும் ஈர்த்து இருக்கிறது. மொழி தாண்டி பலரும் இப்படத்திற்கு செம் சல்யூட் அடித்திருக்கிறார்கள். காலம் காலமாக பெண்கள் படும் இன்னலை படம் அக்குவேறு ஆணி வேறாக பிரித்து வைத்து விட்டது. படத்தின் நாயகி நிமிஷா சஜயனின் நடிப்புக்கு படம் செம தீனி போட்டு இருக்கிறது. கணவனாக வரும் சுராஜ் வெஞ்சரமூடுவின் நடிப்பும் இயல்பாக அமைந்து இருக்கிறது. 

இப்படத்தில் பேசப்பட்டு இருக்கும் சபரிமலை பிரச்சனையால் அமேசான் ப்ரைம், நெட்ப்ளிக்ஸ் போன்ற ஓடிடி தளங்கள் படத்திற்கு நோ சொல்லி இருக்கிறது. இந்நிலையில், இப்படம் தற்போது தமிழில் உருவாக இருக்கிறது. படத்தை கண்ணன் இயக்குகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்புகள் அடுத்த மாதம் காரைக்குடியில் தொடங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. ஒரே நேரத்தில் இப்படத்தினை தெலுங்கிலும் இயக்க இருப்பதால், இரு மொழிகளிலும் பிரபலமான நடிகை ஒருவருடன் படக்குழு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருக்கிறதாக தெரிகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

From around the web

Trending Videos

Tamilnadu News