Categories: Cinema News latest news throwback stories

படப்பிடிப்பில் சிவாஜியை கடுப்பேத்திய சாமியார்..! எல்லாம் பாக்கியராஜ் செஞ்ச வேலை…

தமிழ் சினிமாவில் நிகரற்ற ஒரு நடிகராக இருந்தவர் சிவாஜி கணேசன். சிவாஜி கணேசனுக்கு பிறகு தமிழ் சினிமா எவ்வளவோ நடிகர்களை சந்தித்தப்போதும் அவரை போன்ற இன்னொரு நடிகரை பார்க்கவில்லை என்றே கூறலாம்.

அதே போல இந்த விஷயத்தை தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து நடிகர்களுமே ஒப்புக்கொண்டுள்ளனர். சிவாஜி கணேசன் பல படங்களிலும் நாடகங்களிலும் நடித்திருந்ததால் நடிப்பில் மற்றவர்களை விடவும் அவருக்கு அதிக அனுபவம் இருந்தது.

சிவாஜி கணேசனை வைத்து மற்ற இயக்குனர்கள் படம் இயக்கும்போது அந்த காட்சியில் நடிப்பு ரீதியாக இருக்கும் சிக்கல்களை சிவாஜி கணேசன் எளிதாக சரி செய்துவிடுவார். அந்த அளவிற்கு நடிப்பில் ஞானம் உள்ளவர் சிவாஜி.

சிவாஜி பாக்கியராஜுடன் சேர்ந்து நடித்த திரைப்படம்தான் தாவணி கனவுகள். மிலிட்டரி எனப்படும் மிக முக்கிய கதாபாத்திரத்தில் அதில் சிவாஜி கணேசன் நடித்திருப்பார். அந்த படத்தில் பல காட்சிகளை சரியாக எடுப்பதற்கு சிவாஜி உதவியுள்ளார்.

சாமியார் செய்த வேலை:

அதில் ஒரு காட்சியில் சாமியார் ஒருவர் தீபாரதனை காட்டி கொண்டிருப்பார். அப்போது அங்கு சிவாஜி வருவதாக காட்சி எடுக்கப்பட இருந்தது. சாமியாராக நடிப்பதற்கு புது ஆளை வைத்திருந்தனர். வாஜி அவர் நடிக்கும்போது மற்ற நடிகர்கள் சொதப்பி ரீ டேக் போனால் அது சிவாஜிக்கு பிடிக்காது. எனவே அவர் நடிப்பதற்கு முன்பே அவர்கள் ஒருமுறை ஒத்திகை பார்த்து விட வேண்டும்.

பாக்கியராஜும் அந்த சாமியார் காட்சிக்கு ஒன்றுக்கு பலமுறை ஒத்திகை பார்த்துவிட்டு அதில் சிவாஜியை நடிக்க வைத்தார். ஆனால் அந்த சாமியார் கதாபாத்திரம் சிவாஜியுடன் நடிக்கும்போது சரியாக சொதப்ப துவங்கினார். அவருக்கு தீபாரதனை காட்ட தெரியவில்லை. அதை சிவாஜி சரியாக கண்டுப்பிடித்துவிட்டார். ஆனால் பாக்கியராஜ் அதை கவனிக்கவில்லை. இதனால் சிவாஜி கோபமானார்.

பிறகு தீபாரதனை காட்டிவிட்டு சாமியார் தட்டையும் மணியையும் வைப்பது போல அந்த காட்சியை மாற்றி எடுக்குமாறு சிவாஜி கூறினார். அதன்படி அந்த காட்சி மாற்றி எடுக்கப்பட்டது.

Rajkumar
Published by
Rajkumar