×

தமிழகத்தில் 2வது நோயாளி முற்றிலும் குணம் – அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் !

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த சென்னை நோயாளி குணமாகியுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.

 

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த சென்னை நோயாளி குணமாகியுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.

கொரோனாவால் தமிழகத்தில் நேற்று வரை 23 பேர் பாதித்துள்ளனர். இதில் ஒருவர் உயிரிழக்க ஒருவர் முற்றிலும் குணமானார். மற்றவர்களுக்கு சென்னை மற்றும் மதுரை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நோயாளி குணமாகியுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர், தனது சமூகவலைதளப் பக்கத்தில் ‘தமிழ்நாட்டில் இரண்டாவதாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நபர் குணமடைந்துள்ளார். முக்கியமான இரண்டு சோதனைகளுக்குப் பிறகு அவர் உடலில் கொரோனா வைரஸ் இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. இரு நாட்களில் அவர் மருத்துவமனையில் இருந்து அனுப்பப்படுவார்’ எனத் தெரிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News