
Cinema News
இளையராஜா வைப் தந்த தனுஷ்.. இட்லி கடை செகண்ட் சிங்கிள் ரிலீஸ்..
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். ஆரம்ப காலங்களில் ஒரு ஹீரோக்கான எந்த தகுதியும் இல்லாமல் தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைத்தார். தனது கடின உழைப்பால் தனக்கென தனித் திறமை வளர்த்துக் கொண்டு ஒரு நடிகராக மட்டுமில்லாமல் பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமையை வளர்த்துக்கொண்டார்.
அதனால் கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை சென்ற தனுஷ் தொடர்ந்து வித்தியாசமான கதை களத்தில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியான குபேரா திரைப்படம் தமிழில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் தெலுங்கில் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து நல்லதொரு வெற்றி படமாக அமைந்தது. தனுஷ் தனது அடுத்த ரிலீஸ் தயாராகி வருகிறார்.
அக்டோபர் 2 அன்று அவரே இயக்கி நடிக்கும் ”இட்லி கடை” படம் ரிலீஸ் ஆகிறது. இன்னும் ஒரு மாத காலமே இருப்பதால் படத்திற்கான அப்டேட் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் ஏற்கனவே முதல் சிங்கிள் வெளியாகி இருந்தது. தனுஷ் மற்றும் நித்தியா மேனன் இடையேயான ’என்ன சுகம்’ என்ற ரொமான்டிக் பாடல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியான இன்று இட்லி கடை படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியாகி இருக்கிறது. ’எஞ்சாமி தந்தானே’ என்ற பாடலை தனுஷ் பாடி இருக்கிறார். ஜிவி பிரகாஷ் குமார் இசையில் தனுஷ் எழுதி, பாடி இருக்கும் இந்த பாடல் கோயில் திருவிழாவில் பாடுவது போல் இருக்கிறது. மேலும் இந்த பாடலை இசை ஞானி இளையராஜா வைப் கொடுக்கிறது. அதேபோல அழகான கிராமத்து இசையாக இருக்கிறது.
ஏற்கனவே தனுஷ் தன்னுடைய ஐம்பதாவது படமான ராயன் படத்தை தானே இயக்கி நடித்திருந்தார். படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் சுமாரான வெற்றியை பதிவு செய்தது. அந்த வரிசையில் தற்போது இட்லி கடை படத்தை தானே இயக்கி நடித்து வரும் தனுஷ் தமிழ் சினிமா நீண்ட நாட்களாக எதிர்பார்க்கும் இன்டஸ்ட்ரி ஹிட்டை கொடுப்பாரா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
இட்லி கடை செகண்ட் சிங்கிள் “எஞ்சாமி தந்தானே”