Categories: Cinema News latest news

அந்தப் படத்தில் நடந்தது என்ன? ரஜினிக்கும் கேப்டனுக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம்

தமிழ் சினிமாவில் ஒரு ஒப்பற்ற நடிகராக இருந்தவர் நடிகர் விஜயகாந்த். கிட்டத்தட்ட ரஜினி கமலுக்கு இணையாக 80களில் கலக்கிக் கொண்டு இருந்தவர் நம்ம கேப்டன். அவருடைய சினிமா அறிமுகம் என்பது சற்று வித்தியாசமானது தான். எந்த ஒரு சினிமா பின்பலமும் இல்லாமல் தனியாக உள்ளே வந்தவர் விஜயகாந்த்.

ஆனால் ஒரு வசதியான குடும்பத்தில் இருந்து வந்தவர். மதுரையில் இருந்தபோது அப்போது மிகவும் உச்சத்தில் இருந்த ரஜினிகாந்த் ஒரு பட விழாவிற்கு ரஜினியும் ஸ்ரீபிரியாவும் அங்கு வந்திருந்தார்கள் .அவர்கள் தங்கி இருந்த ஒரு ஹோட்டலுக்கு ரஜினிக்கு பாடி காடாக அனுப்பப்பட்டவர் தான் விஜயகாந்த். அப்போது விஜயகாந்தை பார்த்து ரஜினி” நீ பார்ப்பதற்கு என்னை போலவே இருக்கிறாய். நீயும் சினிமாவில் வந்து நடிக்கலாம் “என்று கூறினாராம். அந்த ஒரு வார்த்தையை வைத்துக்கொண்டு சென்னை வந்தவர் தான் விஜயகாந்த்.

rajini1

அப்போது தன்னுடைய நண்பரான இப்ராஹிம் ராவுத்தரின் துணை கொண்டு சென்னைக்கு வந்த விஜயகாந்த் முதன் முதலில்  “என் கேள்விக்கு என்ன பதில்” என்ற படத்தில் ரஜினிக்கு தம்பியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

அந்தப் படத்தின் ஷூட்டிங்கிலும் விஜயகாந்த் முதல் நாள் போய் நடித்தாராம். அதன் பிறகு என்ன ஆனது என்று தெரியவில்லையாம். விஜயகாந்த் அந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். ஆனால் அங்கு உண்மையில் என்ன நடந்தது என்பது ரஜினிக்கும் விஜயகாந்திற்கும் மட்டுமே தெரியுமாம்.

rajini2

அதன் பிறகு வில்லன் கதாபாத்திரத்தில் ஒரு சில படங்களில் நடித்த விஜயகாந்தை ஹீரோவாக்கி பார்க்க வேண்டும் என்ற ஆசையில் அதன் வழியே கொண்டு போனவர் தான் அவருடைய நண்பரான இப்ராஹிம் ராவுத்தர். அதன் விளைவுதான் இனிக்கும் இளமை என்ற திரைப்படம்.

அந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் விஜயகாந்த். அந்தப் படத்திற்கு பிறகு தான் விஜயராஜ் என்ற பெயரை பார்ப்பதற்கு ரஜினியை போன்று இருந்ததனால் விஜயகாந்த் என்று மாற்றினாராம் அந்தப் படத்தின் இயக்குனர். அதன் பின்னர் எப்படிப்பட்ட உச்சத்தை அடைந்தார் விஜயகாந்த் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம். இந்த தகவலை மீசை ராஜேந்திரன் ஒரு பேட்டியில் கூறினார்.

இதையும் படிங்க : காதல் கவிதை எழுதுறேன்னு படுத்தி எடுக்கிறாய்ங்க!.. சிங்கிள்ஸை கலாய்த்த இயக்குனர் மிஸ்கின்…

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini