simra
Actress Simran: தமிழ் சினிமாவில் 90கள் காலகட்டத்தில் ஒரு கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகை சிம்ரன். மும்பையில் பஞ்சாபி குடும்பத்தில் பிறந்த சிம்ரன் ஆரம்பத்தில் தொலைக்காட்சி தொகுப்பாளராக பணிபுரிந்தவர். அதன் பிறகு மாடலிங், சின்னத்திரை என தனது மீடியா பயணத்தை ஆரம்பித்திருக்கிறார்.
அவருக்கே தெரியாது. பின்னாளில் நாம் சினிமா உலகில் பெரிய கனவுக்கன்னியாக வருவோம் என்று. 1995 ஆம் ஆண்டு முதன் முதலில் ‘சனம் ஹர்ஜாய்’ என்ற ஹிந்தி படத்தில் அறிமுகமானார். ஆனால் முதல் படமே தோல்விப்படமாக அமைந்தது.
இதையும் படிங்க: தளபதி படத்துல யாராவது இந்த விஷயத்தை எல்லாம் கவனிச்சீங்களா? பிரமிக்க வச்சிருக்காங்களே…!
பின்னர் மலையாளம், கன்னடம், தெலுங்கு என படிப்படியாக பிற மொழிப் படங்களில் நடித்த சிம்ரன் தமிழில் முதன் முறையாக ஒன்ஸ் மோர் படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். எந்த ஜோடியை இந்த தமிழ் திரையுலகம் கொண்டாடியதோ அதே விஜயுடன் தான் தன்னுடைய முதல் தமிழ் அறிமுகத்தை பதிவு செய்தார்.
பின் தமிழ் திரையுலகம் சிம்ரனை தங்கள் பெண்ணாகவே பார்க்க ஆரம்பித்தது. தொடர்ந்து தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்த சிம்ரன் தமிழ் திரையுலகில் ஒரு தவிர்க்க முடியாத நடிகையாக மாறினார். அதுமட்டுமில்லாமல் 2000களில் அதிக சம்பளம் வாங்கிய முதல் நடிகையாக சிம்ரன் இருந்தார்.
இதையும் படிங்க: சினிமாவை விட்டே போறேன்னு சொல்லிட்டு யூடர்ன் அடித்த திரை பிரபலங்கள்!.. ஆனாலும் சூப்பர் ஹிட்டுதான்!..
இவர் நடித்த கோவில்பட்டி வீரலட்சுமி மற்றும் துள்ளாத மனமும் துள்ளும் ஆகிய படங்கள் பல விருதுகளை பெற்றது. சிம்ரன் என்று சொன்னாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது இடுப்புதான். அவர் நடித்த எல்லா படங்களிலும் சிம்ரன் தன்னுடைய இடுப்பை வளைத்து ஆடி ரசிகர்களை கிறங்க வைப்பார்.
simbran
அது வேறெந்த நடிகைக்கும் இல்லாத ஒன்று. ஆனால் சிம்ரனின் அந்த மேனரிசத்தை தன்னுடைய நடனத்தில் கொண்டு வந்த ஒரே நடிகை சிம்ரனின் தங்கையான மோனல்தான். பார்வை ஒன்றே போதுமே படத்தில் சிம்ரன் இடுப்பை வளைத்து ஆடுவதை போல மோனலும் ஆடியிருப்பார்.
இதையும் படிங்க: அந்த விவகாரத்திற்கே காரணம் சோபிதாதான்… வெளியான வைரல் புகைப்படம்…
இந்த நிலையில் உங்களை மாதிரி இடுப்பை எப்படி கட்டுக்கோப்பாக வைத்திருப்பது என்ற கேள்வியை தொகுப்பாளினி சிம்ரனிடம் கேட்டார். அதற்கான ரகசியத்தை சிம்ரன் பகிர்ந்திருக்கிறார். அதாவது தினமும் இடுப்பை 150 முறை டிவிஸ்ட் செய்து கொண்டே இருக்கவேண்டுமாம். 150 முறை என 3 செட் பண்ண வேண்டுமாம். இதுதான் கண்டிப்பாக வொர்க் ஆகும் என்று சொல்லியிருக்கிறார்.
Nayanthara: கடந்த…
TVK Vijay:…
TVK Vijay:…
Karur: தவெக…
STR49: சினிமாத்துறை…