Categories: Cinema News latest news

விஜயின் லேடி கெட்டப் ரகசியம்!.. ‘பிரியமானவளே’ படத்தின் படப்பிடிப்பில் நடந்த ருசிகர சம்பவம்!..

நினைத்தேன் வந்தாய், பிரியமானவளே, வசீகரா போன்ற ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் செல்வபாரதி. விஜய்க்கு தொடர்ந்து மூன்று ஹிட் படங்களை கொடுத்து விஜயின் மனதிலும் சரி மக்கள் மனதிலும் சரி நல்ல வரவேற்பை பெற்ற இயக்குனராக விளங்கினார்.

vijay

இந்த நிலையில் பிரியமானவளே படத்தில் நடந்து சுவராஸ்யமான சம்பவங்களை நம்மிடையே பகிர்ந்தார் செல்வபாரதி. அந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பத்தில் விஜய் மனைவி சங்கீதா முதல் பிரசவத்திற்காக லண்டன் சென்றிருந்தாராம். அப்போது ஜூன் மாதம். கால்ஷீட் கொடுத்த தேதியில் தான் சூட்டிங்கும் ஆரம்பமாம். விஜய் இயக்குனரிடம் சொல்லிவிட்டு லண்டன் சென்று விட்டாராம்.

இதையும் படிங்க : தனுஷுக்கு ஸ்கெட்ச் போடும் விக்னேஷ் சிவன்!.. அஜித்தின் அடுத்த படத்திற்கான பக்கா ப்ளான்!..

அங்கு போன பிறகு பிரசவம் இரண்டு நாள்கள் தள்ளிப் போகும் என மருத்துவர்கள் கூற விஜய் இயக்குனரிடம் சார் இன்னும் இரண்டு நாள்கள் ஆகுமாம், கொஞ்சம் சமாளிக்க முடியுமா? என்று கேட்டாராம். செல்வபாரதி பரவாயில்லை தம்பி நான் சிம்ரனை வைத்து காட்சிகளை எடுக்கிறேன், நீங்கள் பார்த்து விட்டு வாருங்கள் என்று சொல்லியிருக்கிறார்.

vijay

மேலும் இரண்டு நாள்கள் தள்ளிப் போகும் என சொல்ல கடுப்பில் விஜய் லண்டனில் இல்லாமல் படப்பிடிப்பிற்கு வந்துவிட்டாராம். அந்த சமயம் தான் அந்த படத்தில் ஜூன் ஜூலை மாதத்தில் பாடலின் காட்சி மைசூரில் எடுத்துக் கொண்டிருக்கிறார்களாம். இந்த பட ஆரம்பத்தில் இருந்தே விஜயிடம் செல்வபாரதி தம்பி ஒரே ஒரு லேடி கெட்டப் மட்டும் போடுங்கள் என்று கேட்டுக் கொண்டே இருக்க விஜய் சம்மதிக்கவே இல்லையாம்.

எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி எல்லாரும் போட்டுவிட்டார்கள், நீங்கள் ஒரு தடவை மட்டும் போடுங்கள் என்று கெஞ்சியும் மறுத்திருக்கிறார் விஜய். உடனே லண்டனில் இருந்து போன் வந்ததாம். விஜய்க்கு மகன் பிறந்திருக்கிறார் என்று. இந்த செய்தியை கேட்டு விஜய் துள்ளிக் குதித்திருக்கிறார். இந்த சந்தோஷத்தில் செல்வபாரதி அந்த லேடி கெட்டப்பை பற்றி பேச விஜய் அண்ணே என்ன வேண்டுமென்றாலும் போட்டுக் கொள்ளுங்கள் என்று சந்தோஷத்தில் சொல்லிவிட்டாராம்.

vijay

சொன்ன மாத்திரத்திலேயே அந்த லேடி கெட்டப் போட்டு உடனே எடுத்து விட்டார்களாம். மறு நாள் விஜய் இந்த சீனை பார்த்து எப்படி எடுத்தீர்கள் என்று ஆச்சரியத்தில் கேட்டாராம். படப்பிடிப்பில் இருந்த அனைவரும் சிரித்துவிட்டனராம். இந்த தகவலை இயக்குனர் செல்வபாரதியே கூறினார்.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini